பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

67



உடம்பில் உள்ள தசை பகுதிகளோ, இதயம் இறைக்கும் இரத்தத்திலிருந்து 20 சதவிகித அளவு தான் எடுத்துக் கொள்கின்றன. ஆனால் மூளைப் பகுதியோ 25% இரத்தத்தை எடுத்துக் கொள்கிறது. அப்படி யென்றால், மூளைக்குத் தேவை எவ்வளவு இரத்தம் போகிறது என்று


எண்ணிப்பாருங்க ள்.


விளையாடும் மாணவர், விளையாட்டுக்குக் காட்டு கின்ற ஆர்வத்தைப் போல, படிப்பிலும் காட்டிவிட்டால், அவர்கள் வகுப்பிலே முதல் மாணவர்களாக மட்டுமின்றி, வாழ்க்கையிலும் முதல்தரமான மக்களாகத் திகழ்வார்கள் என்பதில் ஒரு சிறிதும் ஐயப்பாடில்லை!


கையில் உள்ன பொருளைப் பார்க்க கண்ணாடி வேண்டாமே? விளையாட்டும் அப்படித்தான். வருகிற அறிவும் ஞானமும் அப்படித்தான்.


விளையாட்டின் ஆற்றல்


நன்கு விளையாடுபவர்கள், நல்ல சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். எதிர்த்து விளையாடு பவர்களை ஏமாற்றும் திறன்; ஏமாற்றுபவர்களுக்கு எதிராக தப்பித்துக் கொள்ளும் திறன்; ஏமாற்றுபவர்களுக்கு எதிராக தப்பித்துக் கொள்ளும் திறன்; தாக்குவதும் தடுப்பது ‘ான திறன்கள், இப்படியெல்லாம், அவர்கள் மூளையை நன்கு வேலை வாங்குகின்றனர். அதனால், மூளை நன்கு செயல்பட செயல்பட, இரத்த ஒட்டம் அதிகமாக ஒட உயிர்க்காற்றும் அதிகமாக அங்கு வந்துசேர, நுண்ணிய நரம்புகள் வலிமை பெற்று, ஒடத் தயாராக இருக்கும் பந்தயக் குதிரைகள் போல, செயல்பட, சிந்திக்கத் தயாராக இருக்கின்றன.


விளையாடுகின்ற மாணவர்கள், சிறிது நேரம் அமர்ந்து ‘'’ முயன்றால், படிப்பு தானாகவே வந்துவிடும். மூளை