பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 8 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


தான் செயல்படக் காத்திருக்கிறதே! மூளையைப் பயன் படுத்திக் கொள்ள விளையாடும் மாணவர்கள் தயாராக இல்லையே! அப்புறம் எப்படி படிப்பு ஏறும்.


விளையாடும் வேகம்


விளையாட வேண்டும் என்ற வேகம், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வருவது தவறில்லை. ஆனால், விளை யாட்டின் தன்மை என்ன, உண்மை என்ன என்பதை விளை யாடுபவர்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.


விளையாட்டு என்பது மனதுக்குப் புத்துணர்ச்சியையும், உடலுக்கு புது எழுச்சியையும் அளிக்கக் கூடியதாகும்.


ஒருவர் விளையாடி விட்டு ஆடுகளத்தை விட்டு வெளியே வருகிற போது, களைப்பில்லாமல் வர வேண்டும். அது வரை தான் விளையாட வேண்டும். களைத்துப் போய் நடக்கக் கூட pவன் இல்லாமல் வெளியே வருவது உட லுக்கும் நல்லதல்ல. வாழ்வுக்கும் அது பொருத்தமல்ல.


களைப்பில்லாமல் ஆரோக்கிய உணர்வுடன் விளை யாடும் மாணவர்கள்-விளையாட்டில் பெறுகிற வேகத் துடன், விவேகத்தையும் வளர்த்துக் கொண்டாக வேண்டும்.


விளையாட்டே வாழ்க்கையல்ல. விளையாட்டு வாழ்க் கையின் ஒரு பகுதி. மற்றப்பகுதிகளாக படிப்பு, தேர்வு, அன்றாட வீட்டுக் கடமைகள் எல்லாம் இருப்பதை மறந்து விடக் கூடாது.


வாழ்வின் முன்னேற்றத்திற்கு, விளையாட்டைப் பயன் படுத்திக் கொள்ளவேண்டும். விளையாட்டுக்கே உடலில் உள்ள எல்லா சக்திகளையும் செலவழித்துவிட்டு, மற்ற