பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

69

-


காரியங்களுக்கு மந்தமாகப் போவது அறிவுடையோர்க்கு அழகல்லவே!


படிப்பு எப்பொழுது வரும்


சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்றாளே ஒளவைப் பாட்டி; அதுபோலவே படிப்பும் செயல் பழக்கமாகிறது.


படிக்கப் படிக்கத்தான் மூளை பயன்பட்டு உதவுகிறது படிக்க நேரமில்லை என்று விளையாட்டு வீரர்கள் கூறினால், அவர்கள் தங்களை மட்டுமல்ல, வீட்டில் உள்ளவர்களையும், நாட்டில் உள்ளவர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்றே அர்த்தம்.


விளையாட்டுக்காக எப்படி நேரத்தை ஒதுக்குகி றோமோ, அது போலவே, படிக்கவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும். ஒதுக்கியாக வேண்டும்.


படிக்க விரும்பாமல், நேரம் ஒதுக்காமல், படிக்கமுயற்சி செய்யாமல், படிப்பே வராது, படிப்பு வரவில்லை என்று யாராவது பேசினால், அவர்கள் பொய் சொல்கிறார்கள், புளுகுகிறார்கள் என்றே அர்த்தம்.


விளையாடுபவர்களின் மூளை, வளமாக இருக்கிறது. அதில் உயிர்க் காற்றும் இரத்த ஒட்டமும் மிகுந்து, உயிர்ப் போடு மூளை விளங்குகிறது. எதைக் கற்றாலும், எடுத்துக்


கொள்ளக் கூடிய நிலையில் தான் மூளையும் தயாராக இருக் கிறது.


பனத்தை வைத்துக் கொண்டு, பசியோடு ஒருவன் கிடக்கிறான் என்றால் அவன் சோம்பேறி தானே!