பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



உடலால் உழைப்பதை கேவலமாக நினைத்தது அடுத்த தவறு. *


உடலுக்கு எது வந்தாலும் மருந்து இருக்கிறது. வைத் தியம் இருக்கிறது என்று நம்பி உண்டு உறங்கி, உடலைக்


கெடுத்துக் கொண்டது மூன்றாவது தவறாகும்.


ஆரம்பத் தவறுகளை உடல் தாங்கிக் கொள்ளும். அது உடலில் இயற்கையான ஆற்றலாகும்.


தவறுகள் தாங்க முடியாத சுமையாகும் போது, தேகம் தாக்குதலுக்கு ஆளாகிறது. தடுமாறிப் போகிறது. ஆக்க பூர்வமான வேளைகளில் ஈடுபட முடியாத அளவுக்கு ஆற் றலை இழந்து போகிறது.


உடலின் வேலை கிறுத்தம்


அப்பொழுதும் தவறுகள் குறைக்கப் படாமற். போனால், உடல் வேலை நிறுத்தம் செய்கிறது. அதாவது ஸ்டிரைக் செய்கிறது. அந்த எதிர்ப்பின் வெளிப்பாடு தான் உடலின் சுகவீனம்.


‘உங்கள் தவறுகளுடன் என்னால் ஒத்துப் போக முடி யாது’ என்று தேகம் செய்கிற வேலை நிறுத்தத்திற்குப் பேயர்தான், நோய் என்ற பெயரைப் பெறுகிறது.


சரியான உணவு, முறையான உழைப்பு, நெறியான உறக்கம், தரமான ஒய்வு, திறமான நல்ல பழக்க வழக் கங்கள் என்ற நிலையிலிருந்து, மனிதர்கள் தவறும் போது, தடுமாறுகிற தேகத்தை மீண்டும் சரி செய்ய வேண்டு மானால், தவறுகளை தவிர்ப்பது மட்டுமல்ல. மீண்டும் தேகத்தை செம்மைப்படுத்த, செழுமைப்படுத்த முயற்சிக்க வேண்டும்