பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி 7.3


அந்தத் தரமான முயற்சிக்குப் பெயர்தான் உடற்பயிற்சி யாகும்.


உடற்பயிற்சியா! என்ன அது? என்று ஏளனமாகக் கேட்கும் மதமதர்த்த மக்கள், நம்மிடையே நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.


விரும்பியதை உண்ணுகிற வசதி; உடலை மறைத்து மினுமினுக்கின்ற உடை, உலகை ஆள்கிறோம் என்று கர்வப் படுகிற அளவுக்கு உல்லாச நடவடிக்கைகள்.


இப்படிப்பட்ட மக்களைத்தான், வியாதிகள் விரைந்து போய் கைப்பற்றுகின்றன. கலக்கி விடுகின்றன.


நோய்கள் வருவதை இயற்கையென்றும், தவிர்க்க முடி யாது என்றும் வேதாந்தம் பேசிக் கொண்டு; வேதனைகளை அனுபவித்துக் கொண்டு, நோய்களுக்குத் தங்கும் விடுதியாக வாழும் வக்ரபுத்தியுள்ள மக்களை மீட்டுக் கொண்டு வரும் மேன்மையான பணிதான், உடற்பயிற்சி என்பதை


இன்னும் எல்லோரும் புரிந்து கொள்ளவே இல்லை.


அவர்களின் கேள்வி உடற்பயிற்சியா? என்ன அது?


கேள்விக்கேட்பவர்கள் ஒரு புறம். கேலிக்குரியது என்று சொல்லி மகிழும் கூட்டம் மறுபக்கம். உடற்பயிற்கி அவ சியம் என்று எல்லோரும் சொல்லுகின்றார்கள் என்று கேட் டுக் கொண்டு, நம்பிக் கொண்டு, அதே சமயத்தில் சந்தேகம் ஏற்பட்டு சங்கடப்படுகின்ற மக்கள் தான் நாட்டில் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள்.


LD—– 5