பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அவர்கள் சந்தேகம் நியாயமானது தான். ஏனென்றால், உடற்பயிற்சியைப் பற்றி தவறாகப் புரளி கிளப்பி விடுகிற


வர்கள், படித்த கூட்டமாக இருப்பதால் தான்.


படிக்காதவர்களை விட பாமரர்களாக, மந்த புத்திக் காரர்களாக அவர்கள் இருந்து கொண்டு, தங்களை நம்பு கிறவர்களைத் தடுமாறச் செய்கிற தற்குறிகளாக அல்லவா சமுதாயத்தில் திரிகின்றார்கள்.


ஆக, நாம் இங்கே சில நல்ல விஷயங்களை நினைவுக்குக்


கொண்டு வருவோம்.


சந்தேகங்களை விஞ்ஞான ரீதியில் அலசி, தீர்த்துக் கொள்வோம்.


சகல செளபாக்கியங்களையும், சுகங்களையும் வழங்கு கின்ற உடற்பயிற்சிகளின் மேன்மைகளையும், புரிந்து கொள் வோம்.


உடற் பயிற்சிகள் தரும் கொடைகள்


1. உடற்பயிற்சி உடலை ஒரு அளவோடு வைத்திருக்க உதவுகிறது. (Shape)


2. உடற்பயிற்சி உடலை அழகாகக் (Trim) காத்துக் கொள்ள உதவுகிறது.


2. என்றும் நலமாக, பலமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.


ஆனால், மக்களிடையே முகிழ்த்து எழுகின்ற திடீர் சந்தேகங்கள், திகைப்பூட்டும் நம்பிக்கைகள், தீவிரமான