பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



செய்து, உடலின் ஆற்றலை அழியவிடாமல் காத்து நிற்கின்றன.


குறைந்தது 48 மணி நேரம் முதல் 72 மணி நேரத்திற். குள்ளாக தசைகளை இயக்கி, அந்தக் குறிப்பிட்ட வைட்ட மின்களை உண்டாக்கிக் கொண்டாக வேண்டும் என்பது: தான் ஆராய்ச்சியின் முடிவாகும்.


மூன்று நாளைக்கு ஒரு முறை பயிற்சி செய்யும் போது, இந்த சக்தியை இழந்து போகிறோம். தினந்தோறும் பயிற். சிகள் செய்தால், வைட்டமின்களை வளர்த்துக் கொண்டு, வலிமையாக வாழ்கிறோமே! அதனால்தான், தினந்தோறும் பயிற்சிகளைச் செய்தாக வேண்டும் என்பது ஒரு கட்டாய மான, ஆனால் களிப்பான கடமையாகிறது.


2. எவ்வளவு நேரம் பயிற்சி செய்ய வேண்டும்?


ஒரு நாளைக்கு நான்கு நிமிடப் பயிற்சி போதும் என்ப தெல்லாம், அறிவார்ந்த அணுகு முறையல்ல.


குறைந்தது 20 நிமிடங்கள் பயிற்சிகள் செய்தால்தான், குறிப்பிட்ட எதிர்பார்க்கும் பயன்கள் கிடைக்கும் என்ப தையும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்திருக் கின்றனர்.


நமது உடலில் நானுாறுக்கு மேற்பட்ட எலும்புடன் இணைந்த தசைகள் (Skeletal Muscles) இருக்கின்றன. இந்த எலும்புத் தசைகள்தான் எலும்புகள் இணைப்பான மூட்டுக்களின் தடங்கல்ற்ற இயக்கத்திற்குப் பெரிதும் உதவு கின்றன.


அத்துடன், உடல் நிமிர்ந்து நிற்கின்ற தோரணையை (Posture), உடல் எடையைக் தாங்குகின்ற சக்தியை,