பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மறைந்து கிடக்கும் மனித சக்தி 79.


இந்தத் தசைகள்தாம் தருகின்றன. சுவாசத் தசைகளை உள்ளே அழுத்தி பிராணவாயுவை உள்ளே இழுத்துக் கொள் ளவும், வேண்டாத காற்றை வெளியே தள்ளவும் கூடிய வலிமையான தசைகளையும் இவைதான் அளிக்கின்றன. கழிவுப் பொருட்களை விரைவாக வெளியேற்றவும் எலும்புத் தசைகள்தான் உதவுகின்றன.


ஆகவே, 400க்கும் மேற்பட்ட எலும்புத் தசைகளையும் ஒன்று விடாமல் இயக்கி, ஆற்றல் மிக்கதாக ஆக்கிச் செய் கின்ற பயிற்சி நேரம், குறைந்த அளவு 20 நிமிடமாவது இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் அளவிட் டிருக்கின்றார்கள்.


சிறந்த, திட்டமிடப்பட்ட உடற்பயிற்சிகள், இந்த எலும்புத் தசைகளை சுருங்கவும் விரியவும் வைக்கின்றன. இதற்கு நான்கைந்து நிமிடங்கள் போதாது. 20 நிமிடங் களாவது குறைந்தது வேண்டும் என்பது தான் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.


3. கடுமையான பயிற்சிகளை செய்தால்தான் இந்தப் பலன்


கிடைக்குமா?


கடுமையான பயிற்சிகள், அதிவேகமாக, விரைவாக செய்து முடிக்கும் முறைகள் யாவும் தேவையற்றதாகும். அப்படிப்பட்டப் பயிற்சிமுறை உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதற்குப் பதிலாக, அவதியான நிலைக்கு ஆளாக்கி விடும். -


வேகமாகச் செய்கின்ற பயிற்சிகள் உடல் உறுப்புக்களை. தசைகளைப் பதமாக்குவதற்குப் பதிலாக, விறைப்புத் தன் மையை உண்டாக்கி விடுகின்றன. விறைப்பான (Tight) தசைகள், பிடிப்புக்கு (Pull) ஆளாக்கி விடும்.