பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மேனாட்டு பயிற்சி முறைகள்


(Training Systems)


அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்ல!


உலக அளவில் ஒப்பற்றப் புகழுடைய வீரர்களாக, ஒரு சிலரே வர முடிகிறது. சக்தி மிக்கவர்களாக மிளிர ஒரு. சிலரால் தான் முடிகிறது.


அவர்கள் ஒட்டக்காரர்களாக, எறியாளர்களாக, தாண்டுபவர்களாக, அல்லது ஒரு குறிப்பிட்ட விளை யாட்டில் சிறந்த வீரர்களாக வருகிறார்கள் என்றால், ஏதோ அவர்கள் அதிர்ஷ்ட வசத்தால் உடனடியாக மேலே வந்து விடுகின்றார்கள் என்பது அர்த்தம் அல்ல.


அவர்கள் தங்கள் வாழ்நாட்களை வீண் நாட்களாக ஆக்காமல், வெட்டிப் பொழுது போக்காமல், வெறும் வம்பு வார்த்தைகள் பேசித் திரியாமல், சோம்பித் திரிந்து திண்ணைத் தூங்கிகளாகக் கழிக்காமல், காலத்தை பொன்னே போல் போற்றி, கருத்துடன், கவனத்துடன் காரியமாற்றிய இலட்சியவாதிகள் ஆவார்கள்.