பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்து கிடக்கும் மனித சக்தி

87



‘திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்பது ஒரு சினிமா பாடல்.


தான் எதற்கு வந்திருக்கிறோம், என்ன செய்ய வேண் டும்? தனது எதிர்கால இலட்சியம் என்ன? எப்படி எப்படி யெல்லாம் இருக்க வேண்டும் என்று எண்ணித் தெளிகிற ஒரு வனால் தான், சுயக்கட்டுப்பாட்டுடன் விளங்க முடியும்.


உண்ண வேண்டும், உறங்க வேண்டும். ஊர் சுற்ற வேண்டும், பணம் பண்ண வேண்டும். என்று வந்து விடுகிற பயிற்சி பெறுகிற ஒருவனை, எவ்வளவுதான் திருத்திட முயன் றாலும், நாய் வாலை நிமிர்த்த முயல்கிற கதையாகிவிடும்.


ஆகவே தான், சுயக்கட்டுப்பாட்டை முதலில் வற்புறுத்தி அவர்களை, எந்தக் கருத்தையும் ஏற்கத் தகுந்த தயார் நிலைக்கு உட்படுத்தும் சுயக் கட்டுப்பாட்டு முறையை, முதலில் வளர்க்கிறார்கள்.


அந்த சுயக்கட்டுப் பாட்டின் மூலமாக பண்புகளையும், போட்டிகளுக்கான பெருந் தன்மையான பழக்க வழக்கங் களையும் வளர்த்து விடுவது தான், தலையாய நோக்க மாகும்.


என்னென்ன பண்புகள், தர்மத்தின் அடிப்படையான தகுதிகள், போன்றவற்றை விளக்குதல், அவற்றை விவர மாகத் தெளிவு படுத்துதல், வற்புறுத்துதல், அவற்றை பற்றி கலந்துரையாடல், பலப்பல:சான்றுகளைக் காட்டி நெறிப் படுத்துதல், நீதி வழி நடத்திச் செல்லுதல், பயிற்சி யாளர்கள் வகுத்துக் காட்டுகின்ற பண்புகளின் வழி நடந்து கொள்ளச் செய்தல்.


இவ்வாறு விளையாட்டில் தேர்வதற்கு முன், வெளி யரங்கத்தின் எல்லைக்கு அப்பால் நடந்து கொள்ளும் நற் செயல்களில் ஈடு படுத்தும் கட்டுப்பாடு முறையாகும்.