பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



2. பயிற்சி முறைகள்


பயிற்சி முறைகளை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்கின்றார்கள்.


(அ.) விளக்க முறை. (ஆ.) இயக்க முறை (அ) விளக்கமுறையில், எந்த ஆட்டத்தில் பயிற்சி நடை பெறுகிறதோ, அதைப் பற்றிய வரலாறு வந்ததின் அடிப்படை நோக்கம், இலட்சியம். விளக்கம். விளக்கத் திற்குப்பிறகு ஐயம் தெளிதல், கலந்துரையாடல். இறுதியில் ஒரு முடிந்த முடிவுக்கு வருதல்.


அந்த விளையாட்டில் பங்கு பெறுபவருக்குரிய தகுதி கள், அந்தத் தகுதிகளுக்கும் சம்பந்தப் பட்டிருப்பவர்களும் உள்ள இடை வெளிகள், அவற்றை சரி செய்தல், சமாளித்தல், தகுதிக்குள்ளாக்குதல் போன்றவற்றை விர; களுடன் கலந்துரையாடி மனதில் பதியவைத்தல் போன்ற விளக்க முறைகள், முதலில் மேற் கொள்ளப்படுகின்றன.


ஆ. இயக்க முறை அந்தந்த ஆட்டத்தின் அடிப்படைத் திறன் துணுங்கங்கள் பற்றிய இயக்கங்களை முதலில் பயிற்சி யாளர் செய்து காட்டுதல். அவரைப் பின் பற்றி பங்கு பெறுபவர்கள் செய்து பழகுதல்.


உலக அளவில் தேர்ச்சி பெற்ற சிறந்த வீரர்கள் எவ்வா [Di இயங்குகிறார்கள் என்பதைப் படம்பிடித்து, வீடியோ மூலம் காண்பித்தல்; சினிமா படம் மூலம் காட்டுதல்; சிறு சிS துண்டுப் படங்கள் போட்டுக் காண்பித்தல்; சிறு சிறு படம் ! ந் i விளக்கு தல் o


இவ்வாறு அவர்களுக்கு காதுக்கு இன்பமாகக் கேட்பதைக் காட்டிலும், கண்ணால் கண்டு கருத்தால் தெளிந்து கொள்ள இவ்வாறு காட்சி முறைகள் பின்பற்றப் படுகின்றன H