பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


தருணத்தில் உதவி, பெருமை தேடித் தரும் தேகத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டாமா?


அதற்காகவே, உடல் நலத்தைக் காப்பதிலும் வளர்ப்ப திலும், பலப்பல புதிய யுக்திகளைக் கற்றுத்தருகின்றனர்.


சுற்றுப் புறம் முதலில் அவசியம். அவர்களது மனோ நிலைக்கும், மற்ற அன்றாட வசதிக்கும் ஏற்றவாறு தங்கும் இடம் அமைவது அவசியமாகும்.


நல்ல காற்றோட்ட முள்ள, சூரிய வெளிச்சம் தாராள மாகக் கிடைப்பது போல, தங்கு தடையின்றி தண்ணிர் கிடைப்பது போன்ற இடங்களில், தங்க வைப்பது மிகவும் முக்கியமாகும்.


ருசியான உணவு மட்டுமல்லாமல், மிகவும் சத்துள்ள உணவு வகைகள் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். கையிலே காசை கொடுத்துச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்றால், அது பயிற்சி செய்பவர்களுக்கு உதவுவதாக அமையாது. உடலைக் கெடுப்பதாகவே அமையும்.


உணவுக்குப் பிறகு ஒய்வும் உறக்கமும் அவசியத் தேவை யாகும். இவற்றை மேல் நாட்டினர் மிகவும் வற்புறுத்து கின்றார்கள்.


உணவு, பயிற்சி, உறையுள் போலவே, உடையும் , ஒழுக்கமும் முக்கியமாகும். இவற்றை ஏதோ ஒரு வாரத் திற்கு அல்ல. கட்டாயம் என்றும் கடைபிடிப்பதற்கும் பயிற்சிதர வேண்டும்.


4. மனங்ல முறை


இவற்றிற்கும் மேலாக, அவர்களை மன நலம் உள்ளவர் களாக மாற்றுவது. மனோ நிலையில் அவர்களை வலிமை


யானவர்களாகத் தயார் செய்வது தான்.