பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. இந்தியா எப்பொழுது ஜெயிக்கும்?


சென்ற கட்டுரைகள் உங்களது சிந்தனையைத் துரண்டி யிருக்கும் என்று நினைக்கிறேன்.


நல்லது சொல்வதாக நினைத்துக் கொண்டு நான் சொல்வதை, நியாய மென்று நீங்கள் உணர்ந்து வாழ்த்தா விட்டாலும், இப்படி சொல்லலாமா என்று கோபித்துக் கொள்ளாமல் இருந்தால், அதுவே எனக்கு ஆத்ம திருப்தி யாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்.


பள்ளிக் குழந்தைகளை அதாவது சின்னஞ் சிறு குழந்தைகளை, விளையாட்டுப் பக்கமே விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, கடைசி வரை காப்பாற்றித் திருப்தி காணுகின்ற பெற்றோர்களைக் கொண்ட நமது நாடு, என்று தான் திரும்புமோ? திருந்துமோ?


‘என் மக்களே! நிமிர்ந்து நில்லுங்கள் ! நிமிர்ந்து உட்காருங்கள்! நிமிர்ந்து நடவுங்கள்! கைவீசி கம்பீரமாக,