பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



அறிவை வளர்த்துக் கொல்ள நல்ல நூல்கள் வேண்டும்.


நல்ல நூல்களைப் பாதுகாத்து வைத்து, உதவுகின்ற நூல் நிலையங்கள் வேண்டும். நூல் நிலையங்களில் பணியாற்றி உதவுகின்ற நூலகர்கள் வேண்டும்.


பள்ளிக்கூடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில், ஒரு நூலகர் கூட இல்லையே! புத்தகங்கள் பீரோக்களில் புதையுண்டு கிடக் கின்றன. சிதைந்து சீரழிந்து போகின்றன.


இதை யார் கவனிக்கிறார்கள்? பிள்ளைகள் பேரறிவு பெற வேண்டும் என்று துண்டுகின்றவர்கள் யார்?


அடுத்து, உடல் வளர்ச்சி பெறவேண்டும். உடல் வளர்ச்சிக்கு விளையாட்டும் உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சியை மாணவர்களுக்குப் போதிக்க, அதிகமான எண்ணிக்கையில் உடற்கல்வி ஆசிரியர்கள் வேண்டும்!


தேவைக்கு நிகராக ஆசிரியர்கள் எண்ணிக்கை இருந் தாலும், எண்ணங்களில் திண்மை இல்லையே?


பயிற்சி செய்ய போதுமான இட வசதி இல்லை. பயிற்சி தருபவர்களுக்கும் போதுமான விருப்பம் இல்லை. பயிற்சி தர வேண்டும் என்று வற்புறுத்துகிற தலைமைகளும்’ இல்லையே!


பிறகு எப்படி இளைய சமுதாயம் எழுச்சியுடன் வளரும்:


பாய்ந்து வரும் வெள்ளத்திற்குப் பாதுகாப்பு அணை போடாமல், விரைந்து வெளியேறும் வாய்க்கால் வசதிகள் அமைக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றால், வேசம் பெற்றுவருகிற வெள்ளம் சும்மாவா ஒடும்?


சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் சூழ்ந்து பாழடித்து விட்டல்லவா போகும்!