பக்கம்:மறைந்து கிடக்கும் மனித சக்தி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



உழைப்புக்கும் உற்சாகமான இலட்சியத்திற்கும் வழி திறக்காமல், வாசலே வைக்காமல், உறுதியான நாடகமாக எங்கள் நாடு அமைய வேண்டும் என்று நீங்கள் கூறிக் கொண்டே நாட்களைக் கழிப்பது, நகைப்பிற்குரிய நாடாக அல்லவா இருக்கிறது!


விளையாட்டுத் துறையிலே முக்கியமான நாடுகளாக விளங்குகிற ரஷ்யா, அமெரிக்கா, கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா போன்ற நாடு களைப் பாருங்கள்.


ஏழு வயது பாலகர்கள் முதல் 70 வயது பெரியவர்கள் வரை’ ஒடுகிற பயிற்சியில் ஈடுபடுகின்றார்கள். உற்சாகம் தருகிற உடற்பயிற்சிகளைச் செய்கின்றார்கள். உடல் சக்தியை வளர்ப்பதிலும், ஒய்ந்து போகாமல் காப்பதிலும் தனிக் கவனம் செலுத்துகின்றார்கள்.


தனிமனிதருக்கும் இந்த எழுச்சிகரமான புத்தியைக் கற்பிக்கின்றார்கள். ஒவ்வொருவரும் உள்ளத்தில் உடலைக் காக்கின்ற கலையை, உன்னத கலையாக வளர்த்துக் கொண்டு வருகின்றார்கள்.


அவர்களது சமுதாய அமைப்பு, அரசாங்கத்தின் கவ னிப்பு, செயல்பாடுகளின் சிறப்பு எல்லாமே தனிமனிதத் தேகத்திறம்பாடு என்றல்லவா விளங்குகிறது!


இந்த மாதிரி செய்திகளையெல்லாம் நீங்கள் தினந் தினம் செய்தி தாள்களில் படித்துக் கொண்டு வருவதைத் தான், நான் இப்பொழுது உங்களுக்கு நினைவூட்டுகிறேன் .


இப்படிப்பட்ட ஒரு விழிப்புணர்ச்சி கூட நமது நாட்டில் இல்லையே என்று நான் கூறும் போது, நீங்கள்