72 |
❖ மறைமலையம்-1 ❖ |
பற்றியேயாம். அற்றேல், ஏசுநாதர் தம்மிடம் வந்திருந்த குடிமக்கள் பசியால் வருந்தியது கண்டு அவர்கட்கு மீனையும் அப்பத்துண்டு களையும் வாழ்த்திக் கொடுத்தாரென்று கூறுவதெனையெனின், அக்காலத்திலிருந்த யூதர்களில், அறிவிற்சிறந்த சிலரைத் தவிர, மற்றைப் பொது மக்களெல்லாரும் ஊனுணவு கொண்டு உயிர்வாழ்ந்தவர்களேயாவர். நாளேற நாளேற அவ் யூதமக்கள் உயிர்க்கொலையிலும், அதன்வழியே வரும் பல தீவினைகளிலும் பெருகிவந்தமையின், அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தும் பொருட்டே ஏசு இறைவனருளால் அவர்களிடையே பிறந் தருளினார். அவர்களிடையிற் பிறந்து வளர்ந்த அவர் முதலில் தம்மைத் தூயராக்குதல் வேண்டியே நாற்பது நாள் பட்டினி கிடந்து தவம் செய்தார். அத்தவம் முற்றுப் பெற்றபின், அவர் அவ்யூத மக்கட்கு நல்லறிவு புகட்ட முன்வந்தார். வந்தவர் அவர்களுடைய பழக்க வழக்கங்கட்கு முற்றும் மாறாய் நின்று, அவர்கட்குக் கொல்லாமை முதலிய உயர்ந்த ஒழுக்கங்களைக் கூறப் புகுந்திருந்தால், அவர் சொற்களை எவருஞ் செவி கொடுத்துக் கேட்டிரார். பாகனுக் கடங்காது கடிவாளத்தை யறுத்துக் கொண்டு சடுதியில் விரைந்தோடும் ஒரு குதிரையை அந்நேரத்தில் உடனே பிடித்து அடக்கப் புகுந்தால் அது சிறிதுங் கைகூடாது.பின் அது விரைந்தோடும் வழியே விடுத்து அது தன் மும்முரம் அடங்கி ஓய்ந்த பின் அதனைப் பிடித்து அடக்கிக் கொள்ளுதல் எளிது.அது போலவே,ஊனுண்டு கொடிய விலங்குகளைப் போல் உயிர் வாழ்ந்த அவ் யூதர்களின் பழக்க வழக்கங்களுக்கு இயைந்து நிற்பவரைப் போற் காட்டி அவர்களைத் திருத்துவதே ஏசுவின் திருவுள்ளக் கருத்து. ஆதலால் தமது நல்லுரை கேட்க வந்த அவ்யூதர்க்கு அவர்கள் பட்டினியா யிருத்தல் உணர்ந்து அப்பத் துண்டுகளையும் மீன்துண்டுகளையும் உணவாகக் கொடுத்தருளினார். இங்ஙனங் கொடுத்தவிடத்தும் மாடு,ஆடு,கோழி முதலான உயர்ந்த உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனைக் கொடாமல் அவைகளுள்ளும் தாழ்ந்த படியில் உள்ள மீன் இறைச்சியையே கொடுத்தார். ஐயறிவுடைய சிற்றுயிர்களிலும் ஆடு,மாடு,குதிரை,பன்றி,கோழி முதலியவற்றைக் கொல்லும் தீவினையைவிட மீன்களை வலைவீசிப் பிடிக்கும் தீவினை குறைந்ததாகலின் அவர்களுடைய வழக்கங்