74 |
❖ மறைமலையம்-1 ❖ |
வந்த நச்சுநீரையும், மிகு கொழுப்பையும் புறங்கழித்தற் பொருட்டு அவர் நாற்பது நாள் பட்டினிகிடந்து நோன்பியற்றினார்.அங்ஙனம் நோன்பியற்றிய பின்னர்த் தம் வாழ்நாள் முடியுமட்டும் அவர் எங்கும் ஊனுணவு கொண்டிலர். அவர் வரலாற்றினைக் கூறும் நூல்களும் அவர் ஊனுண்டாரெனக் கூறுகின்றில.
இனிக் கிரேக்கருட் பழையகாலத்தில் அறிவான் மிக்க சான்றோராகிய பித்தாகொரஸ் என்பவரும், பிளேட்டோ என்பவரும் ஊனுண்ணா அறத்தின்கண் நின்றதோடு பிறரும் அங்ஙனமே அதனைக் கடைப்பிடித்தொழுகும்படி அறிவுறுத்தி வந்தனர்.
இனி,உனுணவு கொள்வார்க்கு நுண்ணுணர்வும் பேரறிவும் இல்லாமற் போவதோடு உடம்பும் பொலிவிழந்து போகின்ற தென்பதைப் பண்டைக்காலத்திருந்த மேன்மக்கள் சிலர் உணர்ந்திருந்தன ரென்பது கிறித்துவர் மறையாகிய விவிலிய நூலில், தானியேல் என்னும் மறையிற் சொல்லப்பட்டிருத்தல் கொண்டு நன்கறிகின்றோம். தானியேல் என்னும் பெரியவரும், அவரைச் சார்ந்த சிலரும் தம்மை வருவித்த ஓர் அரசன் தந்த ஊனுணவையும், கொடிமுந்திரிச் சாற்றையும் உட்கொண்டு தம்மை மாசுபடுத்திக் கொள்வதற்கு இசையாராய்த் தாமுண்ணு தற்கு வித்துக்களையும், பருகுதற்குத் தூய தண்ணீரையுமே தரும்படி கேட்டனரென்றும், அதுகண்ட அவ் அரசனின் ஏவலாட்கள் கட்டளைக்கு மாறாக அங்ஙனங் காடுப்பின்,அவர்கள் உடம்பு இளைத்து முகம் வாடிப் போவார்களென்று அஞ்சி வருந்தி நிற்க,அதனையுணர்ந்த அப்பெரியவர், “எமக்கு வித்துணவும், அரசனைச் சேர்ந்தார்க்கு ஊனுணவுங் கொடுத்துப், பிறகு எம்மையும் அவரையும் ஒப்பிட்டு நோக்குக” என்று கூற, அவர்கள் அங்ஙனமே செய்தபிறகு, அப் பெரியவரும் அவரைச் சார்ந்தாரும் பேரறிவும், எல்லாக் கலை உணர்வும் நிரம்பிக் கனவு நிகழ்ச்சிகளையும், மறைபொருட் டோற்றங்களையும் காணும் புலமையைத் திருவருளால் தரப்பெற்றுப் பெரும் பொலிவுடையராய்த் திகழ்ந்தனரென்றும்,அவ் வரசன் ஊனுணவு கொள்வாராய்த் தன்னிடத்துள்ள மறைமொழியாளரும் (மந்திரக்காரரும்) கோள் நூலாரும்