பக்கம்:மறைமலையம் 1.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
67

யாவையெனிற் கூறுதும்: வாதுமை முந்திரி கடுக்காய் தேங்காய் முதலியவற்றின் பருப்புகளும், நாரத்தை எலுமிச்சை வாழை மா பலா இலந்தை பேரீந்து அத்தி முதலியவற்றின் பழங்களும், கோதுமை வாற்கோதுமை அரிசி பால் பாற்கட்டி நெய் முதலியனவும், பசலை தூதுளை பொன்னாங்காணி இலைக்கோசு முதலான கீரைகளும் கத்திரி வாழை மா பலா முருங்கை முதலியவற்றின் காய்களும் உருளை கருணை கொட்டி முதலான கிழங்குகளும், சர்க்கரை கற்கண்டு வெல்லம் முதலியனவும் ஆம். அவரை துவரை உழுந்து முதலியவற்றில் வலிவான கூறு மிகுதியாயிருந்தாலும் அவற்றில் நச்சு நீருஞ் சிறிது கலந்திருத்தலால், அவற்றை யுண்ணும் நாட்களில் அவற்றொடுகூட உருளைக்கிழங்கும் எலுமிச்சையுஞ் சேர்த்துண்ணல் வேண்டும். உருளைக்கிழங்கு எலுமிச்சம் பழச்சாறு கீரைகள் என்னும் இவற்றில் நச்சுநீரைச் செந்நீரிலினின்றும் பிரித்து வெளிப்படுத்துங் கருக்கள் அமைந்திருக்கின்றனவென்று இயற்கைப் பொருணூலார் ஆராய்ந்து கண்டிருக்கின்றார்கள்.இங்ஙனம் மாறு பாடில்லாத வுண்டி மறுத்துண் பவர்களின் உயிர்க்கு ஊறுபாடில்லை என்பதனைக் கடைப்பிடித்துணர்ந்து கொள்க.

அடிக்குறிப்புகள்

1. See. Dr. A. Haig's Food - table

2.Narcotic and alcoholic poison.

3.Professor Charlier of New York.

4.Chemists

5.Alcohol.

6.Dr. Percy.

7.Carbo-hydrates.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/108&oldid=1597317" இலிருந்து மீள்விக்கப்பட்டது