❖ மறைமலையம் 1 ❖ |
கொலைத் தொழிலினின்றும் மகமதியரை விலக்குதற் பொருட்டாகவே அவ்வாறு கொல்லப்படும் அவற்றின் ஊனைத் தின்னலாகாதென்று மகமது முனிவர் மேற் கூறியவாறு கட்ட ளையிடுவாராயினர். மேலுங், கொரான் வேதத்தின் இரண்டாம் பாகத்தில் ஐம்பத்தெட்டாவது அறிவுரையானது பின்வருமாறு காணப்படுகின்றது:
"அவற்றின் ஊனும் இரத்தமும் எந்த வகையாலுங் கடவுளைச் சென்று சேரமாட்டா.ஆனால், உங்களிடம் உள்ள பேரன்பு மட்டுமே அவரைச் சென்று சாரும்."
இவ்வுரையினாற் சிற்றுயிர்களைக் கொன்று கடவுளுக்கு ஏற்பிக்கும் ஊனுங்குருதியுங் கடவுளால் ஏற்கப்படமாட்டா என்பதூஉம்,அவனடியார்கள் உயிர்க் கொலையின்றி மெய்யன் போடு செய்யும் வழிபாடு ஒன்றுமட்டுமே அவரால் ஏற்றுக் காள்ளப்படும் என்பதூஉம் இனிது அறிவிக்கப் படுகின் றன அல்லவோ? மேலுங்,கொரான் முதற்பாகத்தின்கண் உள்ள எண்பதாம் அறிவுரையானது பின்வருமாறு காணப்படுகின்றது:
"அதன்பின் ஆடவன் தன் உணவை நோக்கக் கடவனாக யாம் மழையைப் பொழிவிக்கின்றோம்;அதன்பின் கீறத்தக்க நிலத்தைக் கீறுகின்றோம்;அதன் கண் விளைபொருள்களை விளைவிக்கின்றோம்; அதன் பின் முந்திரிக் கொடியினையுங், குளகினையும், ஒலிவ மரத்தினையும், பேரீந்தினையும், அடர்ந்த தோட்டங்களையும், கனிகளையும், கீரைகளையும் உனக்கும் உன்னுடைய டுமாடுகளுக்கும் உணவுக்காகத் தந்திருக் கின்றோம்."
என்று இதன்கண் எல்லாம் வல்ல இறைவன் ஆடவனைப் படைத்து, அவனுக்கு உணவாவன இன்னவையென்று வரை யறுத்துக் கூறுகின்றுழிப், பயிர்பச்சைகளால் வரும் உணவையே வகுத்துக் காட்டுகின்றனரல்லால், வேறு ஊனுணவைச் சிறிதும் எடுத்துரையாமை கருத்திற் பதிக்கற்பாற்று. இங்ஙனமாக மகமதியர்க்குச் சிறந்த வேதமான கொரானில் மக்களுக்கு இறைவனால் உணவாகக் கொடுக்கப்பட்டவை;மரஞ் செடி கொடிகளின் பயனாகிய பழமும் வித்துங் கீரையும் பூவுங்