பக்கம்:மறைமலையம் 1.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78

❖ மறைமலையம் 1 ❖

5.சைவ உணவுக்கு மாறான கொள்கைகளின் மறுப்பு

இன்னும் ஒருசாரார், ‘உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை விற்பவர்களுக்கே பாவம் உண்டாம்;அதனை வாங்கி உண்பவர்க்குப் பாவம் இன்று' எனக் கூறா நிற்பர்.விலைக்கு விற்கும் ஊனை வாங்குவார் எவருமே இலராயின்,அதனை விற்பாரும் அதன் பொருட்டு உயிர்களைக் கொல்லாரும் இலராதல் சிறு மகாரும் உணர்வரல்லரோ? இவ்வியல்பினை நன்கு தெளிய வைத்தற்கே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார்,

“தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்"

(குறள் 256)

என்று அருளிச் செய்தார் என்க.

இனி,மக்களின் பற்களமைப்பு ஊன் உணவு கொள்ளுதற்கு ஏற்றதாக இருத்தலால்,அவர்கள் ஊன் தின்பது குற்றமாகா தென்பார் கொள்கையினை ஆராய்வாம்; முன் பற்களின் ஓரமாய் இருபுறத்தும் மக்கள் வாயில் அமைந்துள்ள நான்கு நாய்ப்பற்களுங் கூரியனவாய் இருத்தலால், அவை ஊனைக் கிழித்துத் தின்பதற்குத்தான் கருவியாக அமைக்கப்பட்டன வென்பது அவரது கருத்து. ஊனையே தின்று உயிர் வாழும் நாய் பூனை ஓநாய் புலி சிங்கம் முதலிய விலங்குகளின் பற்களெல்லாம் முற்றுங் கூர்மையாய் இருக்க, மக்களுக்கு மட்டும் நான்கு கூர்ம் பற்கள் இருத்தல் ஏன் என்று அவர் ஆராய்ந்து பார்ப்பாராயின், அவை சைவ உணவுப் பண்டங்களிலேயே,முந்திரிக் கொட்டை வாதுமைக் கொட்டை தேங்காய் முதலான வன்பொருள்கள் இருத்தலின்,அவற்றைக் கடித்து நறுக்கித் தின்பதற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/111&oldid=1570172" இலிருந்து மீள்விக்கப்பட்டது