❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
கருவிகளாகவே அந்நான்கு கூரிய நாய்ப் பற்களும் மக்கள் வாயினுள் அமைக்கப்படலாயின என்னும் உண்மை விளங்கா நிற்கும். மக்கள் ஊனுணவு கொள்ளுதற்கே பிறந்தவர்களாயின்,அவர்களின் வாயில் தட்டைப்பற்களே இல்லாமல் எல்லாம் நாய்ப்பற்களாகவே யல்லவோ அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்? பெரும்பாலும் மக்கள் வடிவினை யொத்திருக்கும் வாலில்லாக் குரங்குகளும், பெருங்குரங்குகளுங், காட்டு மனிதனுங்கூட மக்களுக்குள்ள தட்டைப்பற்களும் ஓரத்திலுள்ள நான்கு நாய்ப்பற்களும் உடையனவாயிருந்தும், அவை ஒரு சிறிதும் இறைச்சி தின்னாமற் காய் கனி கிழங்குகள் கொட்டைகள் முதலான சைவ உணவுப் பண்டங்களையே தின்னக் காண் கின்றோம். ஆகவே, மக்களுக்குள்ள கூரிய நாய்ப்பற்கள் நான்கும், மரக்கறியுணவிலேயே வன்பண்டங்களாய் இருப்பவைகளைக் கடித்துப் பிளந்து தின்பதற்காக வகுத்து அமைக்கப் பட்டனவே யல்லாமல்,மற்றைச் சிற்றுயிர்களைக் கொன்று அவற்றின் தசையை உண்பதற்காக அமைக்கப்பட்டன அல்லவென்பது நன்கு புலனாகின்றதன்றோ?
மேலும் மரக்கறியுணவை உட்கொள்கின்றவர்களுக்குப் பற்கள் சிறிதும் பழுதுபடாமல் வெண்மையாய் அழகுற்று விளங்க, ஊன் தின்பவர்களுக்குள்ள பற்களோ பல்வகை நோய்கள் கொண்டு அவர்தம் பற்களைப் பழுதுபடுத்தக் காண்கின்றோ மாகலின்,மக்களின் பல்லமைப்புப் புலால் தின்பதற்குச் சிறிதும் ஏற்றதன்றென்பது நன்கு உணரப்படும்.அங்ஙனமாயின்,சைவராயிருப்பாரிலும் பலர் பல்நோயால் துன்புறக் காண்கின் றோமேயெனின்;மரக்கறியுணவுப் பொருள்களிலும் நஞ்சு உள்ள காப்பிக் கொட்டை தேயிலை கோக்கோ சுண்ணாம்பு புகையிலை முதலியவைகளைச் சைவரும் பார்ப்பனரும் மிகுதியாய் உட்கொள்ளக் காண்டலானும்,மட்பாண்டங்களில் உணவு சமைத்தல் இழிவெனக் கருதித் துரு களிம்பு முதலான கொடுநஞ்சு வாய்ந்த இரும்பு ஈயம் செம்பு பித்தளை அலுமீனியம் முதலான தாதுப் பொருள்களால் ஆக்கிய கலங்களில் அவர்கள் தமது சைவவுணவைச் சமைத்து அதனை நஞ்சாக்க காண்டலானும்,நோய் கொண்ட மாதரின் சேர்கையாற் கொறுக்கு,கை காற் பிடிப்பு முதலான நச்சுப்பிணிகளாற் பற்றப்பட்டு அவர்கள்