பக்கம்:மறைமலையம் 1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
80

❖ மறைமலையம் 1 ❖

இரத்தம் நஞ்சாகித் துன்புறக் காண்டலானும் சைவரிற் சிலர் பலரும் பார்ப்பாரிற் சிலர் பலரும் அவ்வாறு பல்நோய் காள்கின்றாரென்க.எனவே, பல்நோய் வருவித்தற்குரிய ஏதுக்கள் பலவற்றிற்,புலால் உண்பது முதன்மைபெற்ற தொன்றாகும் என்று உணர்ந்து கொள்க. ஐரோப்பிய நாட்டிலுள்ள வெள்ளைக்காரர் பெரும்பாலும் புலாலுணவு கொள்பவர்களாய் இருத்தலினாலேயே,அம்மக்களெல்லாரும் பல்நோயாற் பெரிதுந் துன்புறு கின்றார்கள்.அந்நாட்டிற் பல்நோய் பரவி யிருத்தல் போல் இந்நாட்டில் அந்நோய் பரவாமை, இங்குள்ளார் பெரும்பாலும் மரக்கறியுணவு உட்கொள்பவர்களாய் இருத்தலினாலேயாம் என்க.

மேலும்,புகழ்பெற்ற மருத்து நூலாசிரியராகிய ஹேக் (Dr. A.Haig) என்பவர் சிவிங்கிப்புலி,வாலில்லாக் குரங்குகளின் வாயிலும் மக்கள் வாயிலும் அமைந்த பற்களைத் தனித்தனியே மெழுகிற் பதியவைத்து ஒப்பிட்டு நோக்க, ஊன்தின்னும் புலியின் பற்கள் கூர்ங் கத்தியின் முனைபோன்ற பதிவும், பழந்தின்னுங் குரங்குகள் மக்களின் பற்கள் கூர்மையின்றி ஒத்த பதிவும் உடையனவாய் வேறுபட்டிருத்தலைக் கண்டார். அதுவேயுமன்றி ஊனுணவு கொள்ளாத விலங்குகட்குக் கால்களிற் குளம்புகள் இருப்ப, ஊனுணவு கொள்பவற்றிற்கோ அவற்றிற் கூரிய நகங்கள் அமைந்திருக்கின்றன. மக்களுக்கோ கூரிய நகங்களுங் கூரிய பற்களும் இல்லாமை கருத்திற் பதிக்கற் பாற்று.1 குவியர் (Cuvier) என்னும் ஆசிரியரைத் தலைவராய்க் கொண்ட மருத்து நூலறிஞர் அத்தனை பெயருந்தாந்தாம் ஆராய்ந்தறிந்த ஆராய்ச்சிகளின் முடிபாக, ஒத்து ஒருமுகமாய் நின்று, "மக்களுடம்பின் அமைப்பானது - பல்லமைப்பும் உட்படப் பழவகைகளை உணவாகக் கொள்வதற்கு ஏற்றதாவது திண்ணம் என்று உரை நாட்டுகின்றார் என மருத்துநூற் பெரும் புலவரான ட்ரால் என்பவரும் எடுத்துக் கூறினார்.

இங்ஙனங் காய்கறியுணவு கொள்ளவேண்டிய மக்கள், அதனை விடுத்து,நச்சுநீரும்,நாறுங்கழிவுகளும்,நோய்களும்,அழுக்குகளும்,அழுகலும் நிறைந்த எல்லா வகையான இறைச்சி களையுந் தின்கின்றனர்.இவ்வாறு தின்பதனால் அவர்களுடைய உடம்பு நாறி நலங்குலைய உடம்பின் உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/113&oldid=1570174" இலிருந்து மீள்விக்கப்பட்டது