❖ மறைமலையம் 1 ❖ |
கூற்றினைச் சிறிது ஆராய்வாம்: இந்நிலவுலகத்திற் புற்பூண்டு மரஞ் செடி கொடிகள் முதலான ஓரறிவுடைய உயிர்கள் முதல் இரண்டு முதல் ஐந்தறிவுடைய ஊர்வன நகர்வன திரிவன பறப்பனவாகிய சிற்றுயிர்களும் ஆறறிவுடைய மக்களும் முதன்முதற் றோன்றிய இடம், இந்நிலத்தின் நடு மையத்தைச் சார்ந்த இத் தென்னாட்டையடுத்துத் தெற்குவடக்காய்ச் சென்ற குமரி நாடேயாகுமென்று மேனாட்டு இயற்கை நூல் ஆசிரியர்கள் முடிவுகட்டிச் சொல்லியிருக்கின்றார்கள்? அக் குமரி நாடோ இப்போது தென்கடலுள் மூழ்கிக் கிடக்கின்றது. அந்நாடு கடலாற் கவரப்பட்ட பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே தான்,அந்நாட்டில் உயிர்வாழ்ந்த விலங்குகளும் மக்களும் பல முகமாய்ப் பிரிந்து வடக்கு வடமேற்கு வடகிழக்கில் உள்ள நிலங்களிற் சென்று குடியேறியதாகும். குமரி நாட்டில் இருந்தவரையில் எல்லா உயிர்களும் மரஞ்செடி கொடிகளின் பயனான இலை பூ காய் கனி கிழங்கு வித்துக்கள் என்னும் இவற்றையே உணவாகக் காண்டு உயிர்வாழ்ந்தன. ஏனென்றாற், சூடுமிகுந்த அந்நாட்டிலும் அதனை யடுத்துள்ள பிறநாடுகளிலும் மேற்கூறிய சவ உணவுப் பண்டங்கள் ஏராளமாய்க் கிடைத்தலின் அந்நாட்டை விட்டுப் பனியுங்குளிரும் மிகுந்த வடநாடுகளுக்குச் சென்ற உயிர்களோ,அங்கே புற்பூண்டுகளும் இல்லாமல் எல்லாம் வெறுநிலமாக இருந்தமையின், தமது கொடிய பசித் துன்பம் பொறுக்கமாட்டாமல் ஒன்றை யொன்று பிடித்துக் கொன்று தின்பவாயின. மற்றுக் குமரி நாட்டை விட்டுச் சென்ற உயிர்களுள்ளும் நுண்ணறிவு வாய்ந்தவைகள்,கடுங்குளிர் மிகுந்த வட நாடுகளை நோக்கிச் செல்லாமல், தென்பகுதிக் கண்ணுள்ள மற்றநாடுகளிலேயே குடியேறிச் சைவ உணவுப் பண்டங்களையே தின்று உயிர் வாழலாயின. வடமுனை நோக்கிச் சென்ற உயிர்கள் அப் பக்கங்களில் மரக்கறியுணவு கிடைக்கப் பெறாமையின் ன்றையொன்று பிடித்துத் தின்று ஊனுணவு கொள்ளக் கற்றுக்கொண்ட பின்,பெரிய உயிர்களாயிருந்தவை சிறிய உயிர்களைக் கொன்று தின்று சிலகாலம் வரையில் தமது கொடும் பசியை ஆற்றி வந்தன. அச்சிறிய வுயிர்களும் நாளடைவில் அங்ஙனம் அழிக்கப்பட்டு இல்லையாய் ஒழிந்தபின், ஊனுணவிற் பழகிய மற்றைப் பெரிய உயிர்களிற் பெரும்பாலான மீண்டுந் தென்பகுதிக்கண் உள்ள காடுகளை நோக்கி வரலாயின. வந்து