❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
உண்டாகாவண்ணம் அவற்றை உணர்விழக்கச் செய்யும் அறிதுயில் முறையினை (Anaesthesia) நம் பண்டைமக்கள் அறித்திருந்தன ரென்பது, இருக்குவேத முதல் மண்டிலத்தின்,162 ஆம் பதிகத்தில் ஈற்றில்,
“நீ கடவுள் பாற்செல்லும்போது நின் உயிர்மூச்சு
நினக்குத் திணறுதலை உண்டாக்காதிருக்க!
கோடரியானது நின் உடம்பை ஊறுபடுத்தாததாக!
திறமையில்லாது விரைந்துபிழைபடும் வெட்டுக்காரன்
நின் உறுப்புகளைப் பிழைபடப் பிளவானாக!
உண்மையாகவே நீ இங்கே சாகின்றிலை! நீ ஏதும்
ஊறுபட்டுத் துன்புறுகின்றிலை!
நீ சீரான எளிய நெறியால் தேவர்கள்பாற் செல்லு கின்றனை”
எனப் போந்த மந்திர மொழியால் நன்கு புலனாகும். நன்று சொன்னீர்; இருக்குவேத பதிகங்கள் பாடப்பட்ட அத்துணைப் பழையகாலத்தே, அறிதுயில் முறைகளைப் பண்டை மக்கள் அறிந்திருந்தனரென்பது நம்பற்பால தன்றாமெனிற்; கடலிடையேயுள்ள தீவுகளில் வாழுங் காட்டுமிராண்டி மக்களும் இவ் வறிதுயில் முறையினை நன்கறிந்திருக்கின்றனரென, அத்தீவுகளிற் சென்று அவர்தம் வாழ்க்கையின் இயல்புகளை ஆராய்ந்து கண்டு வந்த ஐரோப்பிய அறிஞர்கள் எழுதியிருக்கின்றனர்.[1] நாகரிக அறிவில்லாக் காடவர்களும் இம் முறையினைத் தெரிந்துளராயின், நம் முதுமக்கள் இதனைத் தெரிந்திருந்தனரென்பதிற் புதுமையும் மாறுகோளாவதும் ஏதுமில்லையென்க. எத்தகைய உயிர்களையும் அறிதுயில் முறையில் தேர்ச்சிபெற்ற ஒருவர் ஒரு நொடிப் பொழுதில் உணர்விழக்கச் செய்யலாம் என்பதும், இன்னும் இதுபோன்ற அறிதுயில் நுட்பங்களும் ‘யோகநித்திரை’ என்னும் எமது நூலில் விரித்து விளக்கப் பட்டிருக்கின்றன; அவைதம்மை அதன்கட் கண்டு கொள்க.
இவ்வாறு அறிதுயில் முறையால் ஒருசில ஆடுகளை உணர்விழக்கச் செய்து சிவபெருமானுக்கு வேட்டு, அவ்வாற்றால் ஆரியர் செய்து போந்த பல சிறு தெய்வவெறியாட்டு வேள்விகளை நிறுத்தி வந்த தில்லைவாழந்தணர் தம் அன்பின் செயல் பாராட்டற்பாலதா யிருந்தமையின், திருஞானசம்பந்தப்-
- ↑ 4