பக்கம்:மறைமலையம் 1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
110

❖ மறைமலையம் 1 ❖


இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

தமிழ் மக்களின் துன்பம் மிகுந்த குறை நாள் வாழ்வு இன்பம் மிகுந்த நிறை நாள் வாழ்வாக மாறி மலர மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை உதவுகிறது.

உயர்வு முறை, உயிர்ப்பு முறை, உணவு முறை, உடைவகை, உறக்கம் ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார் அடிகளார். ஒழுங்கு தவறாத நற்செய்கைகள், கடமையுணர்வு, கடவுள் உணர்வு ஆகியவற்றோடு நினைவை ஒருவழிப்படுத்தலே என்றும் எங்கும் எதிலும் எதிலும் எல்லா நலங்களையும் இன்பங்களையும் பெறுதற்கு ஏற்ற எளிய வழியாகும். உலகியல்பு உணர்ந்து உரியன கற்று, உயர்வு தாழ்வு கருதாது ஒழுகாது ஒழுகுதலே உயர்வு வழியாகும். பகுத்தறிவுப் பயன், நோயற்ற இன்ப அன்பு வாழ்வாகும்.

இவ்வாறு உயரிய வாழ்வுக்கான உரிய வழிமுறைகளைத் தம் இருபத்தைத்தாண்டுக் கால ஆய்வுப் பயனாக அடிகளார் இந்நூலில் அறிவுறுத்தியுள்ளார்.


டாக்டர் நா. செயப்பிரகாசு
மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள் (பக். 18)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/143&oldid=1570762" இலிருந்து மீள்விக்கப்பட்டது