பக்கம்:மறைமலையம் 1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121



ஓம்

1. நீண்ட வாழ்க்கை

“எண்ணரிய பிறவிதனின் மானிடப் பிறவி தான்
யாதினும் அரிதரிது காண்”

என ஆன்றோர் மொழிந்தவாறு இந்த மக்கட் பிறவியைக் காட்டினுஞ் சிறந்தது வேறில்லை. கடவுளாலே இந்த நிலவுலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் எல்லா நன் பொருள்களையும் நுகர்ந்து இன்புறுதற்கும். நமது அறிவை வளரச் செய்து அவ்வறிவின் ஒளியாலே நம்மைப் படைத்த அவ்வெல்லாம் வல்ல கடவுளின் திருவருட் பேரின்பக் கடலில் முழுகி என்றும் அழியாப் பேரின்பத்தை எய்தி இருத்தற்குங் கருவியாயிருப்பது இந்த மக்கட் பிறவியேயாம். இம் மண்ணுலகத்தில் அளவின்றிப் பெருகி யிருக்கும் பலவகை இன்பங்களையும் நுகர அறியாமல், இன்பம் அல்லாதவற்றை இன்பமாகப் பிறழ உணர்ந்து அவற்றை அடைதற்குப் புகுந்து இம்மக்கட் பிறவியை இழந்தோரும் இழக்கின்றோரும் இழப் போருங் கடல் மணலை அளவிடினும் அளவிடப்படார்! மண்ணுலக இன்பத்தை உள்ளவாறு அறிந்து அதனை யடையாது உயிர் இழந்தோர். விண்ணுலக இன்பத்தையும் இழந்து, அதற்கும் மேற்பட்ட கடவுளின் திருவருளின் பத்தையும் இழந்துவிடுவரென்பது திண்ணம்.

அதுமட்டுமா! அவர் தாங் கெடுவதல்லாமலுந் தம்மைச் சேர்ந்த மனைவி, மக்கள், உற்றார், உறவினர், நண்பர் முதலாயினாரையுங் கெடுத்துவிடுகின்றனர்! எவ்வாறெனின். உடம்பின்கண் உள்ள எலும்பு, தோல், நரம்பு, சதை, செந்நீர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/154&oldid=1567715" இலிருந்து மீள்விக்கப்பட்டது