❖ மறைமலையம்-1 ❖ |
முதலான கருவிகள் செவ்வையான நிலையில் இருப்பதுடன். அவ்வுடம்பின் உள் நின்று உலாவும் உயிரின் நினைவுகளுந் தூயனவாயிருந்தால். ஒருவன் சிறிதேறக் குறைய நூறு ஆண்டு உயிரோடிருத்தல் திண்ணம். அங்ஙனமின்றி அவை நிலை பிறழ்ந்து போனால் அவன் சிறு பருவத்திலேயே உயிர் துறப்பன். உடம்பிலுள்ள கருவிகள் சீர் குலைந்துபோனது தெரியாமல், அல்லது தெரிந்தாலும் அதனாற் பின் விளையுந் தீமை இன்னதென்று பகுத்தறியாமல் ஒருவன் ஒரு பெண்ணை மணஞ்செய்து கொள்வானானால், அவன் தனது சேர்க்கையால் அப்பெண்ணின் உடம்பையும் உயிரையும் நிலைகுலையச் செய்து விடுகின்றான். அவ்வாறு அவனும் அவளும் நிலை குலைந்து நிற்குங் காலத்தில் அவர்கட்குப் பிள்ளை பிறந்தால். அதனால் அந்தப் பிள்ளையின் உடம்பும் உயிருஞ் சீர்கெட்ட நிலையை யடைந்து. அதனாற் பலவகை நோய்கட்கும் ஆளாய்க் குழந்தைப் பருவத்திலோ, அது தவறினால் இளமைப் பருவத்திலோ, அதுவுந் தவறினாற் கட்டிளமைப் பருவத்திலோ மாண்டு போகின்றது. இவ்வாறு பிள்ளையுந் துன்புற்று இறக்க இப்பிள்ளையைப் பெற்றாருந் துன்புற்று இறக்க, இவர்களைச் சேர்ந்த உற்றார், உறவினர், நண்பர் என்னும் இவரெல்லாம் மனநோய் மிகப் பெறுகின்றனர். மன நோய் மிகப் பெறவே. அவர்கள் உடம்பின் உள் ஓடுஞ் செந்நீரும் நஞ்சாக எல்லாக் கருவிகளும் நிலைகெட்டுப் போகின்றன. ஆகவே. அவர்களும் நலமிழந்து காலம் முதிரா முன்னரே மாள்கின்றனர். கலப்பாலிலே குற்றின சிறு பிரைத் துளியானது அப் பால் முழுமையும் மாறுபடுத்தித் தயிராக்கு தல் போலத், தூய நல்வாழ்க்கை யுடைய மக்கள் நடுவிலே ஒருவன் அடைந்த சீர்கேடானது அம் மக்கள் எல்லாரையுஞ் சீர்கெடப் பண்ணும் ஆற்றலுள்ளதா யிருக்கின்றது. ஆகையால் தான் கெடுவதல்லாமலுந் தன்னாற் பிறர் கெடுவதையும் உணர்ந்ததாயினும் ஒவ்வொருவருந் வாருவருந் தம் முயிரையும் உடம்பையுந் தூய நன்னிலையில் வைத்து. அதனாற்றம் வாழ்நாளை நீளச் செய்து, நோயற்ற திண்ணிய யாக்கை யினரான மக்களைப் பெற்று. பலர்க்கும் பயன்படுவாராய். இம்மையில் இவ்வுலக இன்பங்களை முற்றவும் அடைந்து மறுமையிலுங் கடவுளின் திருவருட் பேரின்பப் பெருக்கிற் றிளைத்திருத்தலன்றோ