பக்கம்:மறைமலையம் 1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
124

❖ மறைமலையம் 1 ❖

ஷென்ஸி அபலவா[1] என்னுந் துரைமகள் ஒருத்தி நூற்றெண்பதாண்டு உயிரோடு இருந்த தல்லாமலுந், தனது முடிவுகாலம் வரையில் தன் இல்லப் பணி முழுதுந் தானே பார்த்துவந்தனளாம். இவ்வாறே இன்னும் நெடுநாள் உயிரோடிருந்தோர் பெயர்களைக் குறிப்பிடப் புகுந்தால், இதுமிகவும் விரியுமாதலால் இங்கே எடுத்துக் காட்டிய பெயர்களே, நாம் சொல்வது உண்மை யென்பதனையும் அது வெறுஞ் செல்லாய்ப் போகாமல் இன்னும் மெய்யாக உள்ள தென்பதனையும் நிலைநிறுத்துதற்குப் போதுமானவைகளாகும்.

இன்னும் முன்னமே பலவகையால் தமது உடம்பைச் சீரழித்து அழிந்துபோம் நிலையிலிருக்கும் பெரும்பாலார், அவ்வழியினின்றுந் தப்பித் தமதுடலத்தை உரம்பெறச் செய்து நீண்டநாள் உயிர் வாழ்வதற்கு வழிவகைகள் உண்டோ இல்லையோ என்று ஐயுற்றுத் திகைப்படையலாம். உண்மையாக நோக்குங்கால் அவர்கள் அவ்வாறு திகைப்படையக் காரணமில்லையென்பது எமக்குத் தோன்றுகிறது. ஐரோப்பியர் ஒருவர் காமங் கட்குடி முதலான தீய துறைகளிற் புகுந்து நாற்பத்தேழு நாற்பத்தெட்டு ஆண்டுகாறுந் தமது உடம்பை மிகவும் நிலை குலையச் செய்து இறுதிக் காலத்தை எதிர்பார்த்திருக்குந் தறுவாயில், ஒரு ஒரு பேரறிஞர் உடம்பை உரப்படுத்தும் வகையறிவித்தெழுதிய நூல் ஒன்று அவர் கைக்கெட்டியது. அந் நூலைப் படித்த நேரந் தொடங்கி அவ்வைரோப்பியர் தந் தீய ஒழுக்கங்களை யெல்லாம் அறவே விட்டு, அந் நூலிற் சொல்லப்பட்ட முறைகளை எல்லாம் வழுவாது தழுவி நடக்கத் தலைப்பட்டார். அது முதல் அவரதுடலம் மறுபடியுந் திருத்தம் அடைந்து இறுகி நோய் முதலான எவ்வகைக் குற்றங்களும் அணுகப் பெறாமலும் அணுகினாலும் அவை நெடுநாள் நிற்கப் பெறாமலும் நலமாக நீண்டகாலம் வாழ்ந்தனராம். இதைப்போன்ற நிகழ்ச்சிகள் இன்னம் எத்தனையோ உண்டு. ஆகையால், ஆண்டு முதிர்ந்தமையால், உடம்பு தளர்ந்தநிலைக்கு வந்தாலும், அதுபற்றி மனக்கிளர்ச்சி குறையாமல் இந் நூலில் நம்மாற் சொல்லப்படும் முறைகளை வழுவாது பின்பற்றி நடப்பார்களானால்

  1. 6
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/157&oldid=1571996" இலிருந்து மீள்விக்கப்பட்டது