❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
அடுத்தடுத்துக் காற் பங்கே அசைந்து வரலாயிற்று. அவன் அதனை யறியா விட்டாலும், அவனது நுரையீரல் மட்டும் மிகுந்த காற்றுக்கு இடந்தராமற் சுருங்கியே போகும் இதுவே பழக்கத்தினால் நுரையீரலுக்கு வந்த தீங்கு ஆகும். இவ்வாறு நுரையீரல் சுருங்கி அசையப் பெற்ற ஒருத்தியின் வயிற்றில் தோன்றிய கருவானது தூயகாற்று உலவாத தாயின் கருப்பையில் இருத்தலால், அக்குழவியின் நுரையீரலும் விரியாது சுருங்கிக் குறைந்த மூச்சடையதாயிருக்கும். இக் குறைந்த மூச்சசொடுபிறந்த பிள்ளைகள் ஈளை இருமல் முதலிய நோய்களாற் பற்றப்படுகின்றனர்; அது நிற்க.
மூச்சுக் குறைவினால் நோய்வரும் என்று சொல்வது எங்ஙனம் பொருந்துமெனின்; அதனையிங்கே விளக்கிச் சொல்லுவாம்; நமது உடம்பின் உள்ளேயிருக்கின்ற ஒவ்வோர் உறுப்பிற்கும் உணவைக் கொண்டுபோய்ச் சேர்த்து அவற்றை வலிவுபெறச் செய்வது நல்ல சிவப்பான இரத்தமேயாகும். இந்த இரத்தமானது உண்கின்ற உணவினின்றும் வடித்துப் பிரித்தெடுக்கப்படுகின்ற பாலினது திரிபால் உண்டாகின்றது, உண்ட உணவெல்லாந் தீனிப்பையுள் விழுந்தவுடனே, அங்கேயுள்ள மிக நுட்பமான கருவிகளால் அரைக்கப்பட்டு அவை தெளிவுள்ள பாலாகவுந் தெளிவற்ற சக்கையாகவும் பிரிகின்றன; தெளிவுள்ள பாலானது நரப்புக் குழாய்களின் வழியாக மேலே நெஞ்சத் தாமரைக்குச் செலுத்தப்படுகின்றது; அஃது அங்ஙனம் நெஞ்சப் பைக்குப் போனவுடனே இரத்தமாக மாறுதல் அடைகின்றது. தெளிவற்ற சக்கையோ மலக்குடலின் வழியாகவுஞ் சிறுநீர்க் குடலின் வழியாகவுங் கீழே வெளிப்படுகின்றது. இனி,நெஞ்சத்தாமரையின் நெஞ்சப்பைக்குப் பக்கத்தில் நுரையீரலிருக்கின்றது, நெஞ்சப்பைக்கு வந்த உணவின் வடிபால் இரத்தமாக மாறியவுடன், அவ்விரத்தமே நமதுடம்பு வளர்ச்சிக்குப் போதுமானதன்று. அவ்விரத்தம் உயிர்க் காற்றோடு சேராத வரையில், அஃது உயிரில்லாத உடம்பு போற் பயன்பட மாட்டாது. மேலும், உயிர்க்காற்றோடு சேர்க்கப்பட்டால் மட்டும் இரத்தத்திற் சூடு உண்டாகும் சூடில்லாவிட்டால் இரத்தம் உறைந்து கட்டியாகப் போய், உடம்பு முழுதும் பரவமாட்டாது. ஆகையால், உணவின் வடிபால் இரத்தமாக மாறியவுடனே அதற்கு அமிழ்தமும்