பக்கம்:மறைமலையம் 1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
134

❖ மறைமலையம் 1 ❖

வெப்பமுஞ் சேரும் பொருட்டு உயிர்க்காற்றை உள்ளிழுக்கும் நுரையீரலானது நெஞ்சப்பையின் பக்கத்திலே அமைக்கப்பட்டிருக்கின்றது. வெளியேயிருந்து நமது உடம்பின் உள்ளே செல்லுங் காற்று உயிர்ப்பு எனப்படும் அமிழ்தக் கூறும் வெப்பின் கூறும் உடையதாக இருக்கின்றது. அது நுரையீரலிற் புகுந்தவுடனே அக்காற்றிலுள்ள உயிர்ப் பொருள் இரத்தத்திற் கலக்கின்றது. இவ்வாறு உயிர்ப்பொருளொடு கலந்த இரத்தம் பலகோடி நரம்புகளின் வழியே ஓடி நம்முடம்பிலுள்ள எல்லா உறுப்புகளையும் வளர்த்து வருகின்றது.

இவ்வளவு பேருதவியான தொழிலைச் செய்யும் நுரையீரல் என்னுங் கருவியானது காற்றை உள்ளிழுத்து உயிர்ப்பொருளை உடம்பிற் பரவச் செய்வது ஒன்று மட்டுமன்று; அஃது அங்கங்கே இரத்தத்திற் கலந்த நச்சுப் பொருளையும் வெளிப்படுத்தி உதவி செய்கின்றது. உயிர்ப்பொருளைச் சுமந்து கொண்டு உடம்பெங்கும் பரவின இரத்தமானது, அவ்வவ்வுறுப்பிற்கும் அவ்வுயிர்ப் பொருளை ஊட்டியவுடன், அவ்வுறுப்புகள் அங்கங்கே கக்கின நச்சுப் பொருளை எடுத்துச் சுமந்து கொண்டு மறுபடியும் நெஞ்சப்பைக்கு ஓடி வருகின்றது. அங்கு வந்ததும் அதன் பக்கத்தேயுள்ள நுரையீரலால் அந் நச்சுப் பொருள் இரத்தத்தினின்றும் பிரிக்கப்படுங் காற்று வழியாக மூக்கின் மூக்கின்றுளைவழியே வெளிப்பட்டுப் போகின்றது. இவ்வாறு நமது உடம்பிலிருந்து மூக்குத் துளையின் வழியாக வெளிப்படுங் காற்று நச்சுப் பொருள் உடையதாயிருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு எளிதாக வழியொன்று காட்டுகின்றாம். அமிழ்த இயல்புடைய உயிர்க்காற்றுச் சுண்ணாம்புத் தண்ணீரோடு கலக்க மாட்டாது; நஞ்சினியல் புள்ள கரிக்காற்றோ சுண்ணாம்புத் தண்ணீரொடு கலந்து தடிப்பான சுண்ணாம்பை உண்டாக்கவல்லதாகும். ஒருபடி தண்ணீரில் சிறிது சுண்ணாம்பைக் கரைத்துத் தெளிய வைத்தால் சுண்ணாம்பெல்லாம் அடியிலே தங்கிவிடும்; மேலே தேளிவாக நிற்குந் தண்ணீரை மட்டும் ஓர் ஏனத்தில் இறுத்து வைத்துக் கொண்டு, மூக்கின் வழியே வெளிவருங் காற்றை ஒரு சிறு மூங்கிற் குழாயின் வழியாக அவ்வேனத்தி லிருக்குஞ்” சுண்ணாம்புத் தண்ணீர் மேற்படும்படி புறங்கழித்த உடனே அத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/167&oldid=1572005" இலிருந்து மீள்விக்கப்பட்டது