❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
[1]இவ்வேது பற்றியே தான். இதன் உண்மை தெரியாதவர்களிற் சிலர் இரவில் மரங்களின்கீழே கிடந்து உறங்கி, இரத்தங் கக்கி உயிர் துறந்து பிணமாய்க் கிடந்ததை மறுநாளிற் கண்டவர்கள் அவர்கள் பேயடித்து இறந்தார்கள் என்று சொல்லுவதுண்டு. ஆனால், உண்மை அங்ஙனமன்று. இராக்காலத்தில் மரங்கள் தூய உயிர்க்காற்றை உட்கொண்டு நச்சுக்காற்றை வெளித்தள்ளுகின்றன வாகையால், அவற்றின்கீழ் அறியாமற் படுப்பவர்கள் அந் நச்சுக் காற்றை மிகுதியாக உள்ளிழுத்து இரத்தங் கக்கி இறந்து போகின்றனர். மக்கள் உடம்பினுள் உயிர்க்காற்று நுழையா விட்டால், நச்சுக்காற்றே இடைவிடாமல் நுழைந்தால், நெஞ்சத் தாமரையிலிருந்து பல விடங்களுக்கும் ஓடும் இரத்தமானது தன் இயல்புதிரிந்து கரியதாகி மூக்கின் வழியாக வெளிப்பட்டு விடும். இந்த நுட்பந் தெரியப் பெறாதவர்கள் ‘பேயடித்து இறந்தான்’ என்று சொல்லுவர். அவ்வாறாயின் வீட்டைச் சுற்றி மரங்கள் வளர்த்து வைப்பது பகற்காலத்தில் மட்டும் பயன்படுமே யன்றி, இராக்காலத்திற் பயன்படாமல் இடர் விளைப்பதாய் மாறுமே எனின்; இரவில் மரங்களின்கீழ் உங்றகுவதுதான் இடர் பயக்குமேயல்லாமல், அவற்றை விலகி வீட்டுள் உறங்குவது இடர் பயவாது. அவ்வாறானாலும், இரவில் மரங்கள் கக்குகின்ற நச்சுக்காற்றானது வீட்டுள்ளும் நுழையும் ஆகையால், அது நல்லதாவது யாங்ஙனமென்றால்; தூய காற்று உலாவும்படி சாளரங்கள் பல அமைக்கப்பட்டிருக்குமானால் இடை வெளியில் உலவும் உயிர்க்காற்றானது வீட்டினுட் புகுந்து மரத்தினாலுண்டாகும் நச்சுக்காற்றையும் மக்களால் உண்டாகும் நச்சுக் காற்றையும் அகற்றி, வீடு முழுமையும் அப்போதைக்கப் போது தூயதாகும்படி செய்யும். ஆதலால், அஃது ஒரு சிறிதும் இடர்பயவாதென்று அறிக. எனவே பகற்காலமெல்லாம் மக்களுக்குத் தூய உயிர்க்காற்றைத் தருகின்ற மரங்கள் வீட்டைச் சுற்றியிருப்பது இன்றியமையாததாமென்க. இராக்காலத்தில் அம்மரங்களைவிட்டுச் சிறிது அகன்று வீட்டிளுள்ளிருப்போர்க்கு, அவற்றாற் சிறிதுந் துன்ப முண்டாக மாட்டாது. மரங்கள் இருக்கு மிடங்களிற் தூய காற்று மிகுதியாக வீசுவது உலக இயற்கையாதலால், அங்ஙனம் மிகுதியாக வீசுந் தூய உயிர்க் காற்றானது மரங்கள் கக்குகின்ற
- ↑ 3