❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
உடம்பு அழிந்து போம்; எந்நேரமுங் குளிரே பரவிக் காண்டிருந்தாலும் உடம்பு அழிந்துபோம். ஒருகால் வெப்பமும் ஒருகாற் குளிர்ச்சியும் மாறி மாறிப் பரவிக் காண்டிருக்குமானாற்றான் உடம்புக்கு அழிவு வராது. இங்ஙனம் வலது புறத்திலும் இடது புறத்திலும் மாறி மாறிப் பரவிக் கொண்டிருக்குஞ் சூடுங் குளிர்ச்சியும் உலகத்திற் காணப்படுஞ் சூடுங் குளிர்ச்சியும் போல்வன அல்ல. அவை மிகவும் நுண்ணியவாய உடம்பின் உயிர் நிலையான இடங் களைப் பற்றிக் கொண்டு நடக்கும் வெப்பமுங் குளிருமாகும். இந்த நுண்ணிய வெப்பமே மின்னொளி என்றும் விந்து என்றும் தவ நூல்களிற் சொல்லப்படும்; நுண்ணிய குளிர்ச்சியே நிலவொளி என்றும் நாதம் என்றுஞ் சொல்லப்படும்.
இனி,ஊனுடம்பாகிய நமது யாக்கை சிற்றுலகு என்றும், இவ்வூனுடம்பு இருத்தற்கு இடமாகிய இந் நிலம் பேருலகு என்றும் நூல்களிற் சொல்லப்பட்டிருக்கின்றன. சிறிய உலகமாகிய நமது யாக்கையி னுள்ளே நுண்ணிய வெப்பங் குளிர்களான இவ் விந்து நாதங்கள் இடை விடாது உலாவிக் கொண்டிருப்பது போலவே, பெரிய உலகமாகிய இந்நிலவுலகத் திலும் பரிய சூடுங் குளிருமான ஞாயிற்றுக் கலை திங்கட் கலை ஓயாமல், உலவிக் கொண்டிருக்கின்றன.ஆகவே, நமது உடம்பின் நலம் பழுது படாமல் இருக்க வேண்டுமாயின் உலக வுடம்பின் நிகழ்ச்சியை நன்கு அறிந்து, அதற்கு இசைய நமது யாக்கை யுலகின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்து கொள்ளல் வேண்டும். வெளியே வெம்மை மிகுதி யாயிருக்கும்போது நமது உடம்பின் உள்ளேயும் வெம்மை மிகுதிப்படுமாயின் உள்ளே அமைந்த கருவிகள் எல்லாம் எரிந்துபட உடம்பு அழிந்துவிடும் ஆகையால், வெளியே சூடு மிகும்போ தெல்லாம் உடம் பினுள்ளே அதனை எதிர்த்து நிற்பதற்குப் போதுமான நுண்ணிய குளிர்ச்சி உண்டாகல் வேண்டும். அஃதெங்ஙனம் உண்டாகு மென்றால், நமது மூச்சிற் றிங்கட்கலை மிகுதியாகு மாறு செய்து கொண்டால் நுண்ணிய தட்பம் மிகுந்து வேனிற்கால வெப்பத்தினால் வருந்துன்பத்தை ஒழிக்கும்.
இனி,வெளியே மழைகால பனிக் காலங்களிற் குளிர் மிகுதியாயிருக்கும்போது உடம்பின் உள்ளேயுங் குளிர்ச்சி