பக்கம்:மறைமலையம் 1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
148

❖ மறைமலையம் 1 ❖

அங்கே அனைக் கண்டு கொள்க. இங்ஙனம் மூச்சு ஓட்டத்தைத் திருப்பிக் கொள்வதோடு, நீராடுதல், நீர் பருகல், உணவருந்தல் முதலியவற்றையும் ஒழுங்காகச் செய்து, தீனிக்குடல் மலக்குடல்களையுந் துப்புரவு செய்து விட்டால் நோய்ப் படாமல் இனிது வாழலாம்.

இனி, உடம்பின் கணுள்ள ஐயும் பித்தும் வளியுமாகிய முதற் பொருள்களை ஒப்ப வைத்துக் கொள்ளுதற்கும், நுரையீரலை வலுப்படுத்தி இரத்தத்தைத் தூயதாக்குதற்கும் நாடோறும் ஒன்பான் புழைகள் வழியாக வெளிப்படுந் தூவா நச்சுப் பொருள்கள் உடம்பிற் சிறிதுந் தங்காமல் வெளிப்படுதற்கும், நமது அறிவை விரிவுசெய்து விளக்கு தற்கும், உடம்பிற் றட்ப வெப்பங்கள் என்றும் ஒரு நிலையாக இருத்தற்குங் கட்டாயமாகச் செயற்பாலது மூச்சுப் பழக்கமே யாகும். மூச்சுப் பழக்கமானது விடுதல், இழுத்தல், நிறுத்தல் என்னும் மூன்று உறுப்புகளோடு கூடி நடைபெறு வதாகும். இவற்றுள், விடுதல் என்பது உடம்பின் உள்நின்ற காற்றை வெளியே கழித்தல்; இழுத்தல் என்து வெளியேயுள்ள தூய காற்றை உடம்பினுள்ளே வாங்குதல்; நிறுத்தல் என்பது அங்ஙனம் உள்ளிழுத்த காற்றை உடம்பினுள் ளேயே சிறிது நேரம் நிலைப்பித்தல்; இவ்வாறு காற்றைமூக்குப் புழைகளால் மாறி மாறிப் புறங் கழித்து,உள்ளிழுத்து,உள்நிறுத்து தலால் உடம்பில் விந்து நாதங்களாகிய மிக நுண்ணிய தட்ப வெப்பங்கள் ஒருநிலையாகப் பரவிக் கருவிகளை வலுப்படுத்தி உடம்பைப் பொன்போற்றூயதாக்கும். இங்ஙனம் உடம்பு வலுப்பட்டுப் பொன்னியல்பானவனுக்கு உடம்பிற் பளப்பளப் பான பொன்னிறமும், மையைப் போன்ற கறுத்த மயிருங் காணப்படும். அவனை நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு அணுகா. அழியா இயல்பைத் தரும். இம் மூச்சுப் பழக்கத்தை மெய்க்குரு முகமாகக் கேட்டுப் பழகுவதே எல்லார்க்கும் நன்றாகும். மெய்க்குரு முகமாக வன்றிக் காவிக் கோலம் மேற்கொண்டவர்களை யெல்லாம் மெய்க்குருவென நம்பி அவர் கூறுவன கேட்டு உயிரை இழப்ப வர்கள் உலகிற் பலர் அவ்வாறு ஏமாந்து போகாமல் மெய்க் குருவைத் தெரிந்து அவர்பால் அறிவுரை கேட்டுப் பழகிப் பிழைத்திடுக. இது மெய்க்குருவினுரை, இதுபொய்க்குருவினுரை என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/181&oldid=1572503" இலிருந்து மீள்விக்கப்பட்டது