பக்கம்:மறைமலையம் 1.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
156

❖ மறைமலையம் 1 ❖

போர்த்துக்கொண்டு வெயிலில் நடத்தலாகா. கறுப்பு நிறமானது வெயிலின் வெப்பத்தை இழுத்து உடம்பிற் செலுத்துந் தன்மை வாய்ந்தது. வெள்ளை நிறமோ அவ் வெப்பத்தைக் கிட்ட அணுகாமல் தடுத்துநிற்க வல்லது; ஆகையால், தூவெள்ளையான ஆடைகளை மேலே அணிந்து செல்வது வெயிற்காலத்தில் மிக்க நன்மையைத் தருவதாகும். இன்னும் வெயிற் காலத்திற்கும் மழை காலத்திற்கும் ஏற்கும் வகையாக உணவு உட்கொள்ளும் முறைகளைப் பற்றி, அவையிற்றை விளக்க வேண்டும் இயல்களிற் பின்னே விரிவாகப் பேசுவாம். இது நிற்க.

இனிச், சோம்பேறிகளாயிருந்து பயனற்ற செயல்களைப் புரிந்து இறக்கும் அறிவில்லா மக்களிற் பலர் நாம் மேலே எடுத்துக்காட்டிய அருமருந்தன்ன பொருள்களின் சிறப்பையும் பயனையும் அறிய மாட்டாதவர்களாய், இவைகளெல்லாம் என்ன? மக்கள் செய்யக் கூடியனவா! வெயிலிற் காய்ந்தும் மழையில் நனைந்துங் கண்ட கண்டவற்றைத் தின்றும் உயிர் வாழ்கின்றவர்கள் எத்தனை பேர்! அவர்களெல்லாம் நோயின்றி எவ்வளவோ காலம் உயிரோடிருக்கிறார்களே என்று தமக்குத் தோன்றியவாறெல்லாங் கண்ணை மூடிக் கொண்டு மிகவும் எளிதாய்ப் பேசிவிட்டுப் போய்விடுகின்றார்கள். உண்ணச் சோறும் உடுக்கக் கூறையும், இருக்க நிழலும் இன்றித் திரிபவர்கள் திரள் திரளாக இருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால், அவர்கள் நோய் இல்லாமலுஞ் சிறுபோதில் இறவாமலும் நெடுநாள் உயிரோடிருக்கிறார்கள் என்பதோ உண்மை அன்று; அவர்களுடன் கலந்து பார்த்தால், அவர்கள் வெயிலுக்கும் மழைக்குங் குளிருக்குந் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமையினாலே எத்தனையோ வகையான நோய்களுக்கு இரையாகி இளம்பொழுதிலேயே இறந்து போகின்றனர் என்பது நன்கு விளங்கும். அங்ஙனமானாலும், அவர்களிற் பலர் நெடுநாள் வரையில் உயிரோடிருத்தலையுங் கண்டோமே என்றால், அவ்வாறு உயிரோடிருப்பவர்கள் தம்மைச் சேர்ந்தாரிலுந் தாஞ்சிறிது அறிவுடையராய்த் தமது உடம்பின் நலத்தைத் தம்மாற் கூடுமளவும் பாதுகாக்கக் கருத்துச் செலுத்தினவர்களே ஆன உண்மை அவர்களை நெருங்கி கட்டால் தெரிந்து கொள்ளலாம் பாருங்கள்! வெயிலுக்குங் குளிருக்குங் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/189&oldid=1573967" இலிருந்து மீள்விக்கப்பட்டது