❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
இடத்திலும், மற்றொன்றை அது படாமல் இருளாயிருக்கும் மற்றோரிடத்திலும் வைத்துத் தண்ணீர் வார்த்து வரல் வேண்டும்; இங்ஙனம் ஒரு கிழமை அல்லது பத்துநாள் செய்துவந்தபின், இரண்டு செடிகளையும் ஓரிடத்திற் கொண்டு வந்து வைத்து அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால், ஞாயிற்றினொளியி லிருந்து வளர்ந்து வந்த செடியானது பச்சைப்பசேல் என்ன மிகவுஞ் செழுமையாயிருத்தலையும், அது படாமல் இருளில் வளர்ந்த செடியானது வெளிறிப் போய்ச் செழுமையின்றி வாடி வதங்கியிருத்தலையும் எளிதிற் கண்டுகொள்ளலாம். இன்னும் வெயில் வெளிச்சமே படாத ஓர் இருள்மிகுந்த இடத்தில் வைத்து வளர்த்த குழந்தையையும், வெயில் வெளிச்சம் படுமாறு வைத்து வளர்த்த குழந்தையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், வெளிச்சத்திலிருந்தது செழுமையான இரத்தம் மிகப் பெற்று மிகவுஞ் சுருசுருப்பாயும் அழகாயும் இருக்க, இருளில் வளர்த்த பிள்ளையோ வெளுத்துப்போய்ச் சோகை பிடித்து நல்ல இரத்த ஓட்டமின்றிச் சோம்பிக் கிடத்தலைக் கண்டு தெளியலாம். ஆகவே, மக்கள் உடம்பின் வளர்ச்சிக்குஞ் செழுமைக்கும் பகலவனிடத்திருந்து வரும் வெயில் வெளிச்சம் பெரிதும் இன்றியமையாததாமென்பது பெறப்படுதல் காண்க.
இனி, ஞாயிற்றினிடத்திருந்து மிக நுண்ணிய பொருளாகிய விந்து என்னும் ஒரு மின்னொளியானது இடைவிடாது தோன்றி எங்கும் பரவிக் கொண்டிருக்கின்ற தென்பதனை மூன்றாம் இயலில் இனிது விளக்கினாம். அந்த மின்னொளியினாலேதான் உயிர்களின் உடம்பினின்று கக்கப்படுகின்ற நச்சுக் காற்றுகளும், நிலத்திலும் வெளியிலும் உள்ள நச்சுப் பொருள்களும் எப்போதுந் தூய்மையாக்கப்பட்டு வருகின்றன. இவ் விந்து இவ்விந்துவொளியின் வியத்தகும் ஆற்றலினாலே தான் பகற் காலத்திற் புற்பூண்டு மரங்கள் முதலான நிலையியற் பொருள்கள், மற்றை உயிர்கள் வெளிவிடும் நச்சுக் காற்றைத் தாம் இழுத்துக் கொண்டு, தூயதான உயிர்க்காற்றைப் புறம்பே விடுகின்றன. பகலவனில்லாத இராக்காலத்திலோ அவ்வோ ரறிவுப் பொருள்கள் அவ்வாறு உதவியான தொழிலைச் செய்யக் கூடாமல், தாமும் நச்சுக் காற்றையே வெளிக்கக்கித் தீங்கான தொழிலைச் செய்கின்றன, எனவே உயிர்க்குதவியான தூய