❖ மறைமலையம் 1 ❖ |
உடம்பின் மேற் பரவுதலை நாம் பழக்கத்திற் காணலாம்; அவ்வாறு அடிவயிற்றுச் சூடு குறைந்து மேலே பரவுஞ் சாயங்கால வேளையில் வெயில் வெளிச்சம் மேலே படுமானால் அது பித்தத்தைச் சிறிதாயினும் மிகுதிப் படுத்தாது; உடம்பைத் தூய்மை செய்து நலத்தில் வைக்கும். ஆனாலுங், கொடிய வேனிற்காலத்தில் இருபத்து நான்கு நாழிகையான போதிலும் வெயில் வெப்பந் தணியாதிருத்தலால் அது செவ்வையாகத் தணிந்த பிறகுதான் அந்தி வெயிலிற் காயத்துவங்கல் வேண்டும். இங்ஙனமெல்லாங் கதிரவன் சூடாறுதல் பார்த்து காய்ந்து காள்ளும் வகை சிறிது ஆழ்ந்து எண்ணவல்லார்க் கெல்லாம் இனிது விளங்குமாதலால் இதனை இன்னும் விரித்துக் கூறாது நிறுத்துகின்றாம்.
அடிக்குறிப்பு
1. "Syphilis that bane of the so called civilized nations which the physicians are so helpless to eradicate, is unknown among the nude nation unless introduced from abroad. This was the case in Central Africa, in Japan, in the Sandwich Islands, etc. as signified by Livingstone, Sit Samuel W.Baker and others" - Human Culture And Cure by E. D. Babbitt, M.D., LL, D., p. 57.
2. 36 மணித்துளிகள் (நிமிடங்கள்) பிற்பகல் 3.30.க்குமேல்