பக்கம்:மறைமலையம் 1.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மருத்துவம் - 1 ❖
xix



மறைமலைய மாண்பு

மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்!

“புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம்”
வாழிய நலனே! வாழிய நிலனே!


திருவள்ளுவர் நிலையம்,
7, இராமன் தெரு,
திருநகர், மதுரை - 6
625006.

இன்ப அன்புடன்
இரா. இளங்குமரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/20&oldid=1599280" இலிருந்து மீள்விக்கப்பட்டது