❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
துலங்குதலை எளிதிற் கண்டு கொள்ளலாம். இது கொண்டு, இவ்வெழு வகை நிறங்களின் வேறாக வெண்மை நிறம் என ஒன்று இல்லாமை இனிது பெறப்படும்: இதுவல்லாமலும், இவ்வெழு வகை நிறம் வாய்ந்த வெவ்வேறு சாயங்களை எடுத்துச் சேர்க்கும் அளவறிந்து சேர்த்துக் குழைத்தால் வெள்ளைநிறம் உண்டாதலை ஓவியம் எழுதுவார்மாட்டுங் கண்டு தெளியலாம். எனவே, எழுவகை நிறங்களின் சேர்க்கையே வெண்மை நிறமாகுமல்லது, அதுவேறு. தனித்த நிறம் ஆகாமை வலியுறுத்தப்பட்டது. அங்ஙனமாயிற். கறுப்புநிறம் எதன் கண் அடங்குமெனின்; மேற்கூறியபடி கதிரவன் ஒளி பளிங்குத் துண்டினூடு நுழைந்து அப்புறந் தோன்றுங்காற் காணப்படும் அவ்வெழு வகை நிறங்களின் ஊடே ஊடே கரியநிறக் கம்பியோட்டங்கள் காணப்படுதலால் அதுவும் இவ்வெழு வகை நிறங்களுக்குள்ளே அடங்கும் என்று உணர்க.[1] அவ்வாறாயின் அதனையும் ஒன்றாகச் சேர்த்து நிறங்கள் எட்டு என்று உரையாமல் அவை ஏழு என்று உரைத்தது ஏன் என்றால்; மற்ற நிறங்கள் போலக் கரிய நிறங் கதிரவனொளியிற் புலப்படத்தோன்றாமை யானும், அவுரி, நீலம், பச்சை முதலிய மற்ற நிறங்களுள் அடங்குதலானும், அஃத ஒளிக்கு எதிரிடையான இருளில் இருப்பதல்லாமல் மற்ற நிறங்கள் போல ஒளியில் இராமையானும் அது முற்கூறிய ஏழு நிறங்களுள் ஒன்றாக வைத்தேனும் வேறாக வைத்தேனும் இயற்கைப் பொருள் நூலாராற் சொல்லப்பட வில்லை என்க.
இனிக், கதிரவனொளியில் இங்ஙனம் ஏழு நிறங்கள் அடங்கி உள்ளதனை உணர்ந்த முன்னோர்கள் அதனை வெளிப்படையாகக் கூறாமற் சிறிது மறைத்து, ஏழு குதிரைகளாற் பகலவனது தேரானது இழுக்கப்பட்டு ஓடுகின்றது எனக் குறிப்பாற் கூறினார்கள். பகலவனது தேர்க்கு ஒற்றையுருளையே உண்டென்பதும் அவ்வுருளைபோல் உருண்டிருக்கும் இந்த நில உலகத்தையே குறிக்கின்றது பார்க்கின்றவர் கண்களுக்குக் கதிரவன் இந்த நிலவுலகத்தைச் சுற்றி ஓடுவதுபோல் தோன்றுகின்ற தன்றோ? ஞாயிற்று மண்டிலத்தை ஒரு தேராகவும் அதற்குக் கீழே உருண்டை வடிவாகக் காணப்படும் இந்த நில உலகத்தை ஒற்றை யுருளையாகவும் மறைத்துக் கூறினார்களென்று உணர்ந்து கொள்ளல் வேண்டும். இவ்வாறு
- ↑ 1