❖ மறைமலையம் 1 ❖ |
பொருள்களுமே பொருந்து மென்பது முறையாதலால், இம்முறை பிறழும்படி இயற்கைப் பொருள்களான உடம்பினுறுப்புகளுக்குச் செயற்கையான வண்ணங்களை ஊட்டுவது ஒரு சிறிதும் பொருந்தாத செய்கையாமென்க. அது பொருந்தாததாயின, பிற் பொருந்துவதுதான் யாதோவெனின்; ஞாயிற்றினொளி இயற்கைப் பொருளாகலானும், அவ்வொளியில் எழுவகை நிறங்களும் அடங்கியிருத்தலானும் அந் நுண்ணிய நிறங்களை உடம்பினுட் கருவிகளுக்கு ஏற்றுவது தான் முறையாமென்றுணர்க. நல்லது. அதனை ஏற்றும் வகைதான் யாதொவெனிற்; பல நிறமுள்ள கண்ணாடிக் குப்பிகளில் தெளிவான நல்ல நீரை நிரப்பி வெயில் ஒளியில் வைத்து எடுத்து. அந்நீரைப் பருவி வந்தால், உடம்பினுட் கருவிகளில் எந்த உறுப்பில் எந்த நிறங்குறைகின்றதோ அதில் அஃது ஏறி அதனைச் செம்மைப்படுத்தி உடம்பையும் வலிவுபெறச் செய்யும். நோய்களின் வகையும், அவற்றின் றன்மையும், அவற்றிற்கு மருந்தாகத் தரப்படும் நிறநீரும் பின்னே இனிது விளக்கப்படும்.
இனி, நமதுடம்பையும் இவ்வுடம்பினுள் வாழும் உயிரையும் ஒத்த நிலையில் வைத்து அளவிறந்த நன்மைகளைப் பெறுதற்கு உரிய நிறத்துருக் கடவுள் வழிபாட்டை இங்கு ஒரு சிறிது விளக்கியுரைப்பாம். மேலெடுத்துக் கூறிய பகுதிகளில் நிறங்கள் ஏழு என்று சொல்லப்பட்டாலும், அவ்வெழுவகை நிறங்களையும் நுண்ணிதாகப் பகுத்துப் பார்த்தால், அவை ஏழும்இரண்டு நிறங்களுள் அடங்கும். அவ்விரண்டுஞ் சிவப்பும் நீலமும் ஆகும். எல்லா நிறங்களும் இவ்விரண்டு நிறங்களின் சேர்க்கையால் உண்டாயின வேயல்லாமல் வெறல்ல வென்றும். உலக முழுமைக்குங் களைகணாயிருப்பன இவ்விரண்டேயா மென்றும் நுண்ணிய ஆராய்ச்சியில் மிக்கு விளங்கும் இக்காலத்து இயற்கைப் பொருள் நூலறிஞர்களும் இனிது விளக்கி வருகின்றார்கள். அமெரிக்க நாட்டிற் புகழ்பெற்ற புலவராய் வயங்கும் பாபிட் துரையவர்கள் ஒளிநிறங்களின் உண்மை[1] என்ற தமது அரிய நூலில் இவ்வியல்பெல்லாம் முற்றவும் எடுத்துக்காட்டினார். அவர் கூறுமாறு: உலகத்திலுள்ள எல்லா ஆற்றல்களையும் பகுத்து ஆராய்ந்தால் அவை வெப்பமுந் தட்பமும் என்னும் இரண்டிலே அடங்கும்.
- ↑ 2