❖ மறைமலையம் 1 ❖ |
நோய்களும் உண்டாகும்; சளியும்பெருகி ஈளை யிருமல் இளைப்பு முதலிய நோய்களையும் விளைவிக்கும். இந் நிறங்கள் இங்ஙனம் ஒத்தநிலை கெட்டு ஒன்றினொன்று மிகுதலால் உடம்பு பல்வகை நோய்களுக்கு இரையாகி ஒழிவதுடன், அவ்வுடம்பை ஒரு பற்றுக் கோடாகப் பற்றிய உயிரையும் அறிவு பெற வொட்டாமல் தடை செய்து அறியாமை யென்னும் இருளிற் கொண்டு போய் அழுத்திவிடும். இத்துணைக் கெடுதிகளுக்கும் ஒரு பெருங்கருவியா யிருத்தலால் இந்நிறங்கள் ஒன்றினொன்று மிகாமல் இருத்தற் பொருட்டு ஒவ்வொருவரும் அதில் நாட்டம் உடையராய் இடையறாது முயன்று வரல் வேண்டும். வெப்ப தட்பங்களின் விளைவான சிவப்பு நீலம் என்னும் இந் நிறங்கள் இரண்டும் நமதுடம்பில் இருதிறப்பட் நிலைகள் உள்ளனவாய் இருக்கின்றன. நமதுடம்பு பருவுடம்பும் நுண்ணுடம்பும் என இருவகைப்படும். பருவுடம்பிலுள்ள உறுப்புகளும் அவற்றிற் பரவியிருக்கும் நிறங்களும் பரிய வியல்பு உள்ளனவாகும்; நுண்ணுடம்பிலுள்ள உறுப்புகளும் அவற்றிற் பரவியிருக்கும் நிறங்களும் நுண்ணியவியல்பு உள்ளனவாகும். பருவுடம்பும் அதன் உறுப்புகளும் அவற்றிற் பரவியிருக்கும் நிறங்களும், நுண்ணுடம்பையும் அதன் உறுப்புகளையும் அவற்றிற் பரவிய நிறங்களையும் முதலாய்க் கொண்டு தாம் அவற்றின் விளைவா யிருப்பனவாகும் பருப்பொருளெல்லாம் நுண் பொருளின் விளைவாகும். நுண்பொருளெல்லாம் பருப்பொருளின் முதலாகும். பருவுடம்பை இயக்குவது நுண்ணுடம்பு. நுண்ணுடம்பை இயக்குவது இறைவன் திருவருளால் உந்தப்படும் உயிர் ஆகவே, பருவுடம்பில்ஒரு நோய் வந்தால், அந்நோய் நுண்ணுடம்பிலும் இருக்கும்; அந்நோய் பருவுடம்பிற் புலப்படக் காண்டலால் உலகத்திலுள்ள மக்களிற் பலரும் அதனை நீக்குதற்குப் பரும்படியான முறைகளையே தேடிச் செய்கின்றார்கள். பருவுடம்பிற் காணப்பட்ட நோய்க்கு முதலாய் நுண்ணுடம்பிலுள்ள நோயை நீக்க எண்ணுவார் உலகில் மிக அரியர் பருவுடம்பின் கட் செய்த பரிய முறைகள் அவ்வளவும் நுண்ணுடம்பின் நோயை ஒரு சிறிதும் நீக்கமாட்டாதனவாகும் அதற்கு நுண்ணிய முறைகளே வேண்டற் பாலனவாம். நுண்ணுடம்பு உயிரின் நினைவால் இயக்கப் படுவதொன்றாகலின், உயிர் தன் நினைவின் வலிகொண்டே