பக்கம்:மறைமலையம் 1.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
184

❖ மறைமலையம் 1 ❖


இவ்வாறு பொருத்திப் பார்க்குங்கால் உடம்பி லமைந்த உட்கருவிகளும் புறக்கருவிகளும் அசைய அசைய அவற்றை அசைக்கும் உயிராற்றல் கழிந்துகொண்டே வருமென்பது செவ்வையாக விளங்கும். அவ் வுயிராற்றல் கழியக்கழிய, அதனைத் திரும்பத் திரும்ப நிரப்பிக் கொள்ளுதலும் இயற்கையாகவே நடைபெற்று வருகின்றது. எங்ஙனமென்றால் உயிராற்றலுக்கு நிலைக்களம் இரத்தம், இரத்தத்திற்கு நிலைக்களம் உணவுந் தண்ணீரும் நல்ல காற்றுமாகும்; உயிராற்றல் குறையக்குறையத் தீனிப்பையைப் பற்றியிருக்கும் பசியும் விடாயும் ஆகிய சூடு அதனை நமக்கு அறிவிக்கின்றது; உடனே நாம் உணவையுண்டு நீரைப் பருகுகின்றோம். இரத்தத்தை உண்டு பண்ணுதற்குக் காற்றுந் தண்ணீரும் உணவுங் கட்டாயமாய்க் காணப்பட்டாலும், இரத்தம் நெகிழ்ந்த பதத்தில் இருத்தலால் அதற்குத் தண்ணீரே முதன்மையான ஏதுவாயிருக்கின்றது. ஆகவே உடம்பில் இரத்தம் நிறைந்திருக்க வேண்டிய அளவுக்கு ஒருவர் நீர் அருந்தாவிட்டால், இரத்தஞ் சுண்டி உயிராற்றல் கறைந்து போகுமென்பதை யாஞ் சொல்ல வேண்டுவதில்லை. அது கிடக்க.

இனி, நாம் இருக்கும் வீடுகளிற் சேரும் அழுக்குகளைக் கழுவி விடுவதற்குத் தண்ணீர் இன்றியமையாது வேண்டப்படுதல் போல, நமதுடம்பின் புறத்தையும் அகத்தையுங் கழுவித் துப்புரவு செய்தற்குந் தண்ணிரே முதன்மைப் பொருளாயிருக்கின்றது. நமதுடம்பின் மேலே போர்க்கப்பட்டிருக்குந் தோலின் அமைப்பைச் சிறிது உற்றுப் பாருங்கள்; அது முற்றும் வியர்வைத் துளைகளால் நிறைக்கப்பட்டிருத்தலைக் காண்பீர்கள்; அத் துளைகள் நமதூனக் கண்ணுக்கு நன்கு புலப்படாவிடினும், பெருக்கக் கண்ணாடி[1] (Microscope) வழியாக நோக்குவார்க்கு அவை பெருத்த வாயுள்ள துளைகளாக இருத்தல் நன்கு புலப்படும்; அவை மேற்றோலின் ஒரு விரற்கடை நாற்கோணத்திற்கு இரண்டாயிரத்து எண்ணுறு விழுக்காடு உடம்பெங்கும் நிறைந்திருக்கின்றனவென்றும். அத்துளைகளையுடைய சிறு சிறு குழாய்கள் தோலின் மேற்புறத்திலிருந்து தோலின் அடியிலேயுள்ள கொழுப்புப் படை வரையில் நிலப்புழுக்களைப் போல் சுரிந்து சுரிந்திருக்கின்றன வென்றுஞ் சுரிந்திருக்கும் அவற்றை யெடுத்து

  1. 1
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/217&oldid=1575800" இலிருந்து மீள்விக்கப்பட்டது