பக்கம்:மறைமலையம் 1.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
187


இன்னும், நீரின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் உரைக்கப் புகுந்தால் இது மிக விரியும், அதன் சிறப்புகள் அனையவும் ஒருங்குணர்ந்த தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்.

“நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு”

(குறள் 20)


என்று அருளிச் செய்தமையால் உலகத்திலுள்ள எவ்வகை யொழுக்கமும் நீரையின்றி நடைபெற மாட்டாதென்பது தெளிவாய் உணரப்படும் அது நிற்க.

இனி, இத்துணைச் சிறப்புடைத்தாகிய நீரை நாம் இந்நிலத்திலே பெற்றுக் கொள்ளும் இடங்களையும் அவற்றைத் துப்புரவாக வைத்துக் கொள்ள வேண்டும் வகைகளையும் அடுத்த இயலிற் பேசுவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/220&oldid=1597634" இலிருந்து மீள்விக்கப்பட்டது