188
8. நீர் நிலைகள்
ஊழிக்காலத்தன்றி மற்றெக்காலத்தும் வற்றாத நீர் நிரம்பியிருக்கும் பெரிய நீர்நிலை குளிர்கடல் ஒன்றேயாகும். மற்றைக் கிணறு, மடு, ஆறு, குளம், ஏரி முதலியனவெல்லாஞ் சேர்ந்தாற்போல் ஏழெட்டு ஆண்டுகளா மழை பெய்யாவிட்டால் நீர்வற்றி வறண்டுபோம். மழை பெய்தாலுங் கூட அக்கிணறு மடு முதலிய நீர்நிலைகளுக்கு நீரைத் தரும் பெருநிலையாயிருப்பதும் பெருங்கடல் ஒன்றேயாகும். எங்ஙனமெனிற், காட்டுதும். கதிரவன் வெப்பத்தாற் கடலிலுள்ள நீர் ஆவியாக மாறி மேலெழுந்து வானத்தில் மாசியாகப் படர்ந்திருக்கின்றது. வேனிற் காலத்தில் வானமெங்கும் காணப்படும் வெள்ளிய மாசி அத்தனையும் இங்ஙனம் உண்டான நீராவிப்படலமேயன்றி வேறல்ல. மழை காலத்திலே வானத்தின்கட் குளிர்காற்று உலவுததால், அக்குளிர் காற்றினால் தீண்டப்பட்ட மாசிப்படலம் உறைந்து நீர்த்துளிகளாகக் கீழே விழுகின்றது. தண்ணீர் ஆவியாக மாறி நிற்குங்கால் நுண்ணிதாய் இருத்தலின் வெண்ணிறத்தொடு வானிற் உலவுகின்றது; பின்னர்க் குளிர்காற்று மேலே படுங்கால் அவ்வாவி இறுகுதலிற் கருநிறத்ததாய்ப் பருப்பொருளாகி மேல் நிற்கமாட்டாமற் கீழே மழைத்துளிகளாக இறங்குகின்றது. இவ்வாறு கடல்நீரால் மாசியும், மாசியால் மழையும் உண்டாவது பற்றித்தான் முகிலானது கடல்நீரைக் குடித்து அதனை மழையாகப் பொழிகின்றது என்று எல்லாருஞ் சொல்லுகின்றார்கள். அங்ஙனங் கடல்நீரினாலேயே மழைநீர் உண்டாவதாயிற், கடல்நீர் மிகவும் உப்பாயிருக்க, மழைநீர் மட்டுந் தீஞ்சுவை யுடைய தாயிருத்தல் ஏன் என்றால், ஞாயிற்றின் வெப்பத்தாற் கடலின்கண் உள்ள நீர்மட்டும் ஆவியாக மாறி மேல்எழ, அந்நீரிற் கலந்திருந்த உப்புப் பிரிபட்டுப் பின்னும் அக்கடலில் உள்ள நீரிலேயே தங்கி விடுகின்றது. இவ்வாறு உலக