பக்கம்:மறைமலையம் 1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
195

ஊறும்படி செய்து மாந்தர்கள் தமது அறியாமையாற் பெரிதும் இடர் உழக்கின்றார்கள். நமதுடம்பிலிருந்து வெளிப்படுங் கழிவுகளான மலம் சிறுநீர் வியர்வை அழுக்கு முதலியவற்றில் நிரம்பவுங் கடுமையான நச்சுப் பொருள்கள் இருக்கின்றன. இவ்வழுக்குப் பொருள்களும் இவற்றொடு கலந்த சாக்கடைத் தண்ணீருங் கிணறுகளின் சுற்றுப் பக்கங்களில் தங்குமாயின். வானத்திலிருந் திறங்குந் தூயதான மழைத் தண்ணீர் இவற்றொடு கலந்து நிலத்தினுள்ளே சுவறி அக்கிணறுகளில் வந்து சோரும் அத்தன்மையதான தண்ணீரில் எல்லா நஞ்சுங் கரைந்து ஒன்றுபட்டிருத்தலால், அதனைப் பருகுவோர் உடனே குளிர் காய்ச்சல், கால் வீக்கம், விதைவீக்கம், முதலான பலதிறப்பட்ட கொடுநோய்களாற் பற்றப்படுகின்றனர்.

சென்னப்பட்டினத்திற் பல ஆண்டுகளுக்கு முன்குழாய் வைக்கப்படவில்லை; அதனாற் சாக்கடைக் கால்வாய்களும் அப்போது கட்டப்படவில்லை; எல்லாருங் கிணற்றுத் தண்ணீரையே புழங்கி வந்தனர். சாக்கடைத் தண்ணீரில் ஊரார் கழிக்கும் அழுக்குகளெல்லாஞ் சேர்ந்து நிலத்திற் சோர்ந்தன; மழைத்தண்ணீரும் அவற்றொடு கூடி அடி நிலத்திலிறங்கிக் கிணறுகளில் ஊறிற்று. இங்ஙனம் ஊறிய நீரைச் சென்னப்பட்டினத்தில் உள்ளவரெல்லாரும் அப்போது பயன்படுத்தி வந்தமையால் அவர்களிற் பலர்க்கு நரம்புச் சிலந்தி யென்னும் ஒரு கொடிய நோய் வந்து கொண்டிருந்தது; வேறு பலர்க்கு யானைக்கால் நோய் வந்தது; மற்றும் பலர்க்கு விதை வீக்கம் உண்டாயிற்று இன்னும் பலர்க்கு நச்சுக் காய்ச்சலும் அம்மையும் மற்றுஞ் சில கொடிய நோய்களும் அடிக்கடி தோன்றி வருத்தின. இவற்றையெல்லாம் ஊன்றிப் பார்த்த ஆங்கில அரசினர் குடிகள்பால் இரக்கம் மிக வைத்துச் சென்னைக்குப் பன்னிரண்டு மைல் சேய்மையிலுள்ள ஒரு பெரிய ஏரியில் நிற்குந் தூய இனிய தண்ணீரைக் குழாய்களின் வழியாகக் கொணர்ந்து அப்பட்டினத் திலுள்ளார்க்குப் பயன்படுத்துவாராயினர்; அதனொடு சாக்கடைத் தண்ணீர் நிலத்திற் சோராமற் கால்வாய்கள் கட்டி அப்புறப்படுத்தவதுஞ் செய்தனர்; மலம் முதலான கழிவுகளையும் ஊரைவிட்டு நெடுந் தொலைவிற் கொண்டுபோய் அகற்றி விட்டனர். நலந்தரும் முறைகளுக்குரிய இவ்வருமந்த ஏற்பாடு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/228&oldid=1597661" இலிருந்து மீள்விக்கப்பட்டது