❖ மறைமலையம் 1 ❖ |
பொருட்டு எல்லாவுயிரும் நீர் பருகுகின்றன; புதிதாகப் பருகின நீர் திரும்பவும் இரத்தத்திற் கலந்து மேற்கூறிய தொழிலைத் திரும்பவுஞ் செய்கின்றது. இங்ஙனமே திரும்பத் திரும்பப் பருகும்நிர் உடம்பின் வளர்ச்சிக்கும். உடம்பினுட் கழிவுகளைப் புறம்படுத்தற்கும் ஓயாமற் பயன்பட்டு வருகின்றது, இத்துணைப் பயன் உடைமையினாலேதான் நீர்விடாயானது எவ்வுயிராலுந் தாங்குதற்கு அரியதாயிருக்கின்றது, விடாயினால் உண்டாகுந் துன்பம் பொறுக்க முடியாமல் உயிர்கள் படும்பாட்டை நீரற்ற மணல் வெளிகளிற் கடுவெயிற் காலத்தில் வழிச்செல்வோர் நன்கறிந்திருப்பர். விடாய் உண்டானவுடனே நீர் அருந்தி அதனைத் தீர்த்துக் கொள்ளும் நம்மவர்க்கு அத் துன்பம் நன்கு புலனாகாவிடினும். விடாய்த்த காலத்தில் அவரும் உடனே நீர் பருகாமற் சில நாழிகை நேரம் இருந்து பார்த்தால், அவர்க்கும் அதன் கடுமை விளங்காமற் போகாது.
இனித், தொழின்முயற்சி சிறுக உடையார்க்கு உடம்பின் வளர்ச்சியும் உட்கழிவுகளுங் குறைவாயிருக்கு மாதலால். அவர்க்கு நீர்விடாய் மிகுந்து தோன்றாது. மற்றுக் கடுமுயற்சியுடையார்க்கோ உடம்பின் வளர்ச்சியுங் கழிவுகளும் மிகுதியாய் இருத்தலால் அவர்க்கு நீர்விடாய் முறுகித் தோன்றும். அதனால் அவர் அடுத்தடுத்து நீரையேனும். பாலையேனும், தீவிய நீர்களையேனும் பருகுகின்றனர், இடைவிடாமல் மரங்களை வெட்டிச் சுமைகட்டும் விறகுக்காரனையேனும். எழுத்தெழுது வோனை யேனுந் திறமையாகப் பேசுவோனை யேனும் பாருங்கள் அவர்கள் எவ்வளவு நீர்விடாய் மிகுந்தவர்களாய் அடிக்கடி தண்ணீர் குடிக்கின்றார்கள்! அவர் செய்யும் வேலையின் கடுமைக்குத் தக்கபடி அவருடம்பெங்கும் வியர்வையானது முத்து முத்தாய்த் துளித்து வழிந்தோடுகின்றது.
இவை மட்டுமா? நுரையீரலினால் உள்ளிழுக்கப்படுங் காற்றிலுள்ள உயிர்க் காற்றானது இரத்தத்திற்கலந்து உடம் பெங்குமுள்ள பலகோடி உயிர்த்துகள்களில்[1] நெருப்பெரியும் படி செய்துவருகின்றது. இங்ஙனம் எரியும் நெருப்பின் வெப்பமே உடம்பெங்குஞ் சூடாய்க் காணப்படுவதாகும். உடம்பினுள்ளே ஓயாது எரிந்து கொண்டிருக்கும் இத்தீ தன் அளவு கடவாமல்
- ↑ 1