❖ மறைமலையம் 1 ❖ |
போகின்றன. குறிப்பாய், நோய் உள்ள ஊர்களில் இருப்பவர் எந்த நீரையும் நன்றாய்க் காய்ச்சிக் குடிப்பதே நல்லது; இதனாற் பல பெருங் கொடுநோய்களுக்குத் தப்பிப் பிழைக்கலாம்,
நச்சுப் புழுக்களினால் மட்டுமே யல்லாமல் அவ்வந்நிலங்களில் இருக்குங் கருப்பொருள்கள் சிலவற்றின் சேர்க்கையாலுந் தண்ணீர் கெடுதி செய்யக்கூடும்: சுண்ணாம்பு நிலங்களில் ஊறுந் தண்ணீரானது உடம்புக்குத் தீமையை விளைவிக்கும்; கந்தக நிலங்களிற் சுரக்கும் நிரோ உடம்புக்கு நன்மையைத் தரும். ஆதலால், நிலத்தின்பாங்கை யறிந்து அதில் நிற்கும் நீரைப் புழங்கல் வேண்டும். ஈயங் கலந்த நீர் வயிற்று வலியினையும் மலக்கட்டினையும் வருவிப்பதாகையால், ஈயக்கலங்களில் நீரையும் மற்றை யுணவுப் பொருள்களையும் வைத்துக் கையாளுதல் பெரியதொரு குற்றமாகும்; அறியாமையால் இக் கலங்களைக் கையாண்டு நோயால் வருந்துபவர்கள், மரவுப்பு உவர்மண் கலந்த கலந்த தண்ணீரை உட்கொண்டு வருவார்களானால் அவை அவருடம்பிற் கலந்த ஈயத்தைப் பிரித்து வெளிப்படுத்திவிடும். நம்மனோரிற் பொருளுடையார் பலர் மட்கலங்கள் புழங்குவது தாழ்வென நினைந்து, வெண்கலம் செம்பு பித்தளை முதலியவற்றாற் சமைத்த கலங்களை உணவுப் பொருள் சமைத்தற்கும் அவற்றை வைத்தற்கும் எடுத்துப் பரிமாறுதற்கும் மிகுதியாய்க் கையாண்டு வருகின்றார்கள்; அறிவில்லாதவர் கொண்டாடும் பொய்ப் பெருமையின் பொருட்டு இவற்றைக் கையாளப்புகும் இவர்கள் நீரிழிவு, பித்தசோகை, வயிற்றுப்பிசம், உறுப்புவீக்கம் முதலான கொடுநோய்களால் துன்புறுத்தப்படுதலின், இனியேனும் இவர்கள் இப் பொய்ப்பெருமையினை வேண்டாது, அக்கலங்களையுந் தொலைத்துத் தம்மையுந் தங் குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். உணவுப் பொருள்களைச் சீர்குலையாமல் வைத்து உடம்பை நலம்பெறத் திருத்துவதில் மட்கலங்களைவிடச் சிறந்தவை எவையும் இல்லையென்பது திண்ணம். இக் கலங்கள் ஏழைகளும் பணக்காரருமாகிய எல்லாருங் கையாளுதற்கு எளிதிற் கிடைப்பனவாம். இம் மட்கலங்களைப் போலவே கண்ணாடிப் பாண்டங்களும் பீங்கான் பாண்டங்களும் நல்னவாய் இருப்பினும். அவை