❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
விலையேறப் பெற்றன வாயிருத்தலால் அவைகளை ஏழையெளியவர்கள் எல்லாரும் வாங்கிக் கையாளல் இயலாது. இன்னும் இவற்றினும் விலையுயர்ந்த வெள்ளிக் கலங்கள் பொற் கலங்களும் குற்றமில்லாதனவாய்ப் பெரிதும் நன்மை பயப்பனவாயினும், இவையும் பொருள் மிகுதியுமுடைய செல்வர்களே கையாளத் தக்கனவாயிருக்கின்றன. ஆகவே, எல்லாவாற்றாலும் எல்லாருக்கும் நலந்தருவனவுங்’ கவலையுந் துன்பமுந் தராதனவும் மட்கலங்களே யென்பதும். இவற்றைக் கையாளுதலே எல்லார்க்கும்இசைந்ததாயிருத்தலின் இவற்றின் புழக்கத்தைத் தாழ்வாக எண்ணுவது பெரியதோர் அறியாமையா மென்பதும் பெறப்படும்,
இனி,நச்சுப் புழுக்களும் அழுக்குந் தீய கருக்களும் இன்றித், தூய்தாய் உள்ள தண்ணீரை இயற்கையில் உள்ளபடியே யெடுத்து அருந்துதல் நல்லதோ? அன்றி அதனையுங் காய்ச்சிச் சூட்டோடு உண்ணுதலே நல்லதோ என்று வினவினாற். செம்மை நூல் வல்லாரில் ஒரு சாரார் குளிர்ந்தநீர் பருகுதலே நலம் என்பர்; மற்றொரு சாரார் வெந்நீர் அருந்துதலே நலம் என்பர்; ஆயினும் இவ்விருவர் சொல்லிலும் உண்மை இருகின்றது. குளிர்நீர் உண்டால் உடம்பிலுள்ள வெக்கை தணியும்; உள்ளுள்ள கருவிகள் இறுகி உறுதியாகும். வெந்நீர் உண்டால் தீனிப்பையிலுள்ள அழுக்குகளும் நச்சுக் காற்றுகளும் அகலுவதோடு, உண்டவுணவும் நன்றாய்ச் செரிக்கும். உடம்புழைப்பு மிகுதியாயுள்ளவர்கள் குளிர்ந்த நீரும். மூளையுழைப்பு மிகுதியாய்ச் செய்பவர்கள் வெந்நீரும் பருகுதல் நன்றாம். ஏனென்றால் உடம்பு வருந்த உழைப்பவர்களுக்கு இரத்தக் கொதிப்பு மிகுதியும் உண்டாகி ஏராளமான வியர்வையைப் பெருக விடுமாதலால், அவர்க்கு அக்கொதிப்பு அடங்கும் வண்ணமும். அவர் செய்யும் உழைப்புக்கு இன்றியமையாது வேண்டுங் கருவிகள் எல்லாம் இறுகி உறுதிய யிருக்கும் பொருட்டும் அவர் தண்ணீர் அருந்து தலே நலமுடைத்தாம். கற்றல் எழுதல் கற்பித்தல் பேசல் முதலான மனமுயற்சி யுடையவர்களுக்கோ அடியிற் சூடு உண்டாகு தலானுந், தீனிப்பையிலுள்ள இரத்தத்திற் பெரும் பாகம் மூளைக்குச் செல்லுதலாற் றீனிப்பையிற் சூடு குறைந்து செரிக்கும் ஆற்றல் குறைதலானும் அடிக்சூட்டைத் தணிக்கும்