❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
யான நீர் அருந்துவதில் விருப்பஞ் செல்கின்றதோ அதற்கியைந்தபடி ஒன்றனை அருந்துவதுஞ் செய்யலாம். குளிர்ந்த நீரைப் பருகுவதற்கு வேட்கை மிகுதியாய் எழும்போது, உடம்புக்கு அந்நேரத்தில் அது தான் வேண்டப் படுவதென்பதனை நன்குணர்ந்து அதனையே பருகுதல் வேண்டும்; அவ்வாறு அதன்கண் வேட்கை வேட்கை எழாமல் வெந்நீரையே மிகுதியும் அவாவினால் அப்போதுடம்புக்கு அதுவே வேண்டப்படுவதன்பதனை நன்குணர்ந்து பார்த்து அதனையே பருகுதல் வேண்டும். இவ்வாறு உடம்பின் கூறுபாட்டை யுணர்ந்து சிற்சிலகால் முற்கூறிய முறைபிறழ நீருண்ணுதலுங் குற்றமாகாது. என்றாலும், இம்முறைப் பிறழ்ச்சிக்குச் சிற்சில நேரங்களிற்றான் இடம் கொடுக்கலாமே யல்லாமல் எப்போதும் இங்ஙனம் மாறி நடக்கலாகாது. மேற்கூறியபடி உடம்பு ழைப்பு மிகுதியாயுள்ளவர்கள் குளிர்ந்த நீரும் மனமுயற்சி நிரம்ப உடையவர்கள் வெந்நிரும் பருகி வரலே உடம்பின் நலத்தைப் பாதுகாத்தற்குரிய நன்முறையாம் என்க.
இனி, இவ் விருதிறத்தாரும் ஒரு நாளில் எத்தனை முறை நீரருந்தல் வேண்டுமென்றால், அவரவரது உழைப்பினளவுக்கும் வேட்கையினளவுக்குந் தக்கபடி அதனைச் செய்வதுதான் பெரிதும் பொருத்தமாகும். ஒவ்வொருவருந் தமது உடம்பினியற்கையைச் செவ்வையாக நினைந்து பார்த்தால், தாம் ஒரு நாளில் எத்தனை முறை நீர் அருந்தல் வேண்டு மென்பதனை நன்கு தெளிந்து கொள்ளலாம்! கடுக உழைப்பவர்கள் அடுத்தடுத்து நீர் உண்ணலும், மெல்ல முயல்பவர்கள் அங்ஙனம் நீர் உண்ணாமையும் நினைந்து பார்க்குங்கால் உடம்பு வேண்டுமளவுக்குத் தக்கபடி நீர் குடித்தலே இயைந்ததாகத் தோன்றுகின்றது. கடுந் தொழில் செய்பவர்கள் அடுத்தடுத்து நீர் குடியாவிட்டால் பெரிதுந் துன்புறுவர்; அதுபோலவே, கடுந்தொழிலின்றி மென்முயற்சியுடையவர்கள் தாமே வலுகட்டாயமாக அடிக்கடி நீரருந்தல் நீர்வீக்கம் முதலான நோய்களாற் பற்றப்பட்டு மிகவுந் துன்புறுதற்கே இடமாய் முடியும். இவ்வுண்மையுணராத[1] அமெரிக்க செம்மை நூலாரிற் சிலர் விடாய் எடுத்தாலும் எடாவிட்டாலும் எல்லாரும் அடுத்தடுத்து நீர் பருகல் வேண்டுமென்றுரைப்பர். பசியெடாத
- ↑ 2