❖ மறைமலையம் 1 ❖ |
செவ்வையாய்ச் சிரைத்து எடுத்துவிட்டுப், பிறகு மெருகெண்ணெயை[1] அதன்மேல் நன்றாய்ப் பூசிவிட்டார் அவ்வெண்ணெய் நன்றாய்க் காய்ந்து அதன் வியர்வைத் துளைகளை முற்றும் அடைத்துவிடவே, சிறிது நேரத்திலெல்லாம் அந் நாய் இறந்துபோயிற்று. அதனைக்கொண்டு, வியர்வைத் துளைகள் அடைபடாமலிருக்கும்படி செய்துகொள்ளவெண்டுவது எத்துணை இன்றியமையாததாய் இருக்கின்றதென நாம் உணர்ந்துகொள்கின்றனம் அல்லமோ? அத்துளைகள் அடைபடாமல் இருக்கும் பொருட்டு அடுத்தடுத்து நீராட வேண்டுவதும் இன்றியமையாததென்று அறிகின்றனம் அல்லமோ? நீராடாமலிருப்பவர்களின் உடம்பு நஞ்சாய்ப் போதலோடு அருகிலிருப்பவர்கள் அருவருக்கும்படி முடை நாற்றமும் வீசுகின்றது. அதுமட்டுமோ, அவர்களுடம்பிலுள்ள நச்சுப்பொருள்கள் அவர்களைச் சுற்றிலுமுள்ள காற்றிற் கலந்து சூழ உள்ளவர்கட்கும் அதன் வாயிலாக நோயை வருவிக்கின்றது. ஆகவே,தமக்கும் பிறர்க்கும் நன்மை தரற்பொருட்டு ஒருவர் தமதுடம்பை அடிக்கடி கழுவித் துப்புரவாய் வைத்துக்கொள்வது ஒருபெருங் கடமையாய் இருக்கின்றது. உலகிற் பெரும்பாலார்க்கு வரும் நோய்களிற் பல ஒடம்பைக் கழுவாமையால் வருவனவாகலின், அவர் அதனைக் கருத்தாய்க் கழுவித் துப்புரவு செய்யவே, அந் நோய்கள் மருந்தினுதவியும் வேண்டாமல் தாமே விலகி ஒழியும்; ஒருமுறை ஓர் அம்மை, நோயாய்க் கிடந்த தன் குழந்தையை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவர் அக் குழந்தையின் நிலைமையைப் பார்த்து, “அம்மே! நான் சொல்லுகிறபடி நீங்கள் பிசகாமற் செய்கிறதாயிருந்தால், நான் உங்கள் குழந்தைக்குள்ள நோயை விரைவில் நீக்கக்கூடும்,” என்றார்; அதற்கு அந்த அம்மை இசையவே அம் மருத்துவர், அம்மே! ஒரு பெரிய துத்தநாகத் தகட்டுத் தொட்டியில் வெதுவெதுப்பான நீரை முக்காற் பங்கு நிரப்பி இக்குழந்தையை அந்த நீரில் இட்டு, அதனுடம்பை முற்றிலும் பன்னீர்ச் சவர்க்காரத்தாலும் உரப்பான துணியினாலும் நாடோறும் நன்றாய்த் தேய்த்துக் கழுவி வாருங்கள்” என்றார். அவ்வம்மை யாரும் அவர் சொன்னபடியே செய்துவர அக் குழந்தையைப் பற்றியிருந்த நோய் விலகிப்போயிற்று. இதனால், உடம்பை
- ↑ 1