பக்கம்:மறைமலையம் 1.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
218

❖ மறைமலையம் 1 ❖

பூரான் நண்டுத்தெறக்கால் முதலான நச்சு உயிர்களுக்கு நஞ்சின் கடுமை மிகுதிப் படுதலாலும்,பகல் முழுதும் மறைந்து கிடக்கும் அவை இராப் பொழுது வந்ததும் வெளிக்கிளம்பி இயங்குவதொடு நீர்நிலைகளுக்கு வருவதனாலும் அந் நேரத்தில் வீட்டின் வெளியே செல்லுதலும் நீர்நிலைகளிற் சன்று குறித்தலுஞ் சிறிதும் ஆகாவாம்.ஆதலால், ஞாயிற்றின் ஒனி மறைந்த மாலைப் பொழுது துவங்கி இரவுகழியும் வைகறையாமம் வரையும் நீராடுதல் ஒருவாற்றானும் பொருந்தாதென்று துணிக.

அங்ஙனமாயின்,ஓரொருகால் இரவிற் குளிக்க வேண்டுவது கட்டாயமாய் நேர்ந்தபொழுது என் செய்வ தென்றால், கிணற்று நீரை எடுத்துக் காய்ச்சி உடம்பு பொறுக்கக் கூடிய பதத்தில் அதனைத் தலைமேற் சொரிந்து முழுகுதல் வேண்டும்.நீரிற்கலந்த நச்சுக்காற்றெல்லாந் தீயிற் காய்ச்சுகையிற் பறந்து போய்விடும்.இந்த ஏதுவால் அருந்துகிற நீரும் இரவில் வெந்நீராகவேயிருத்தல் வேண்டும் என்பது தானே புலப்படும்; உண்ணும் உணவும் வெய்தாக வேயிருத்தல் வேண்டும். இரவிற் பெரும் பாலும் இம்முறைகளைப் பின்பற்றி வருவது நலமுடைத் தென்றாலும் ஏராளமான தூயகாற்று வீசும் இடங்களில் இவ்வளவு விழிப்பு வேண்டுவதில்லை.காற்று அடைப்பான பகுதி களிலேதாம் நிரம்பவும் விழிப்பாய் இருத்தல் வேண்டும்.

இனி, நீராடுவதற்கு எத்தகைய நீர் ஏற்புடையதாம் என்பதனைப்பற்றி ஒருசிறிது பேசுவாம்: உடம்புழைப்பு உள்ளவர்கள் குளிர்ந்த நீரிலும் மூளையுழைப்புள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரிலும் நோயாளிகள் உடல் பொறுக்கக் கூடிய வெந்நீரிலுந் தலைமுழுகுதல் வேண்டும்.குளிர்ந்த நீரிற் குளிப்பது உடம்பை இறுகச்செய்து வலிவாக்குமாதலால் உழைப்பாளிகட்கு இது கட்ட ாயமாக வேண்டப்படும். அறிவுமுயற்சி உடையவர்களுக்கு உடம்புமிகு இறுகாமல் நொய்தாகி வேண்டுமளவுக்கு மட்டும் வலிமை பெற்று நிற்க வேண்டுமாதலால்,அவர் அதற்கு ஏற்றபடி வெதுவெதுப் பான நீரிலேதான் முழுகுதல் நன்று, மேலுங் குளிர்ந்த நீரில் தோயும்போது அந் நீரின் குளிர்ச்சியால் எப்படிப் பட்டவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/251&oldid=1584097" இலிருந்து மீள்விக்கப்பட்டது